YouTurn

ஹஜ் யாத்திரை சென்ற வங்கதேசத்தினர் படத்தை சபரிமலை பக்தர்களுடன் தொடர்புப்படுத்திப் பரவும் தவறான தகவல் !

ஹஜ் யாத்திரை சென்ற வங்கதேசத்தினர் படத்தை சபரிமலை பக்தர்களுடன் தொடர்புப்படுத்திப் பரவும் தவறான தகவல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் உள்ள வேறுபாடு.

X link | Archive link 

விரிவான விளக்கம்

கேரளா சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கடந்த சில நாட்களாக பன்மடங்கு அதிகரித்து உள்ளது. பக்தர்களின் அதீத எண்ணிக்கையால் கூட்ட நெரிசல் ஏற்பட்டும், வாகனங்கள் செல்வது தாமதமாகி பக்தர்கள் காத்திருப்பது உள்ளிட்டவை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி வசதியாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆனால், சபரிமலைக்குச் செல்கின்ற ஐயப்ப பக்தர்கள் பேருந்தில் நெரிசலாக அடைத்து வைத்தது போல் அழைத்துச் செல்லப்படுகின்றனர் எனப் பொருள்கொள்ளும்படி புகைப்படம் ஒன்றினை இந்து மக்கள் கட்சி டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. இதனை வலதுசாரிகள் பலரும் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். 





X link 

உண்மை என்ன ? 

சபரிமலை மற்றும் ஹஜ் யாத்திரை தொடர்பாகப் பரவும் படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், அப்படம் 2018ம் ஆண்டு சவுதி அரேபியா மதீனாவில் இருந்து வங்கதேசம் டாக்கா-விற்கு புறப்பட்ட விமானத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. 

‘Daily sun’ என்னும் இணையதளத்தில் 2018, ஆகஸ்ட் 25ம் தேதி வெளியான செய்தியில், ஹஜ் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் மதீனாவில் இருந்து டாக்கா புறப்பட்டது. இந்த ஆண்டு (2018) 371 ஹஜ் விமானங்கள் மூலம் 1,27,298 பேர் ஹஜ் யாத்திரை சென்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்செய்தியில் பரவக் கூடிய புகைப்படம் இடம்பெற்றுள்ளது.



இதேபோல் 2013ம் ஆண்டு டாக்காவில் இருந்து ஹஜ் பயணிகளுடன் புறப்பட்ட பிமன் (Biman) பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் எடுக்கப்பட்ட படம் ‘Alamy’ தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பரவக் கூடிய படத்தில் இருப்பது போன்ற இருக்கைகளை அதிலும் உள்ளது. இதிலிருந்து பரவக் கூடிய படம் பிமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.



பிமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருக்கையில் தலைக்கு அருகே வைக்கக் கூடிய காகிதத்தில் உள்ள இலச்சினையும் பரவக் கூடிய படத்தில் இருப்பதும் ஒன்றாக உள்ளது. இவற்றிலிருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களின் படம் வங்கதேச விமானத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.



எனவே, சபரிமலைக்குப் பேருந்தில் செல்வதையும், ஹஜ் யாத்திரைக்கு விமானத்தில் செல்வதையும் ஒப்பிட்டு இருப்பது சரியானது அல்ல. 

முடிவு : 

நம் தேடலில், சபரிமலை மற்றும் ஹஜ் யாத்திரை செல்லும் பக்தர்கள் குறித்துப் பரவும் படத்தில் இருக்கும் ஹஜ் யாத்திரை தொடர்பான புகைப்படம் மதீனாவில் இருந்து வங்கதேசம் டாக்காவிற்குச் செல்லும் விமானத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க