யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2021ம் ஆண்டு கார் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நடந்த F4 பந்தயத்துடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சமீபத்தில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடந்தது. இந்நிகழ்வு நடிகை நிவேதா பெத்துராஜின் அறிவுறுத்தலின் அடிப்படையில்தான் நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் சென்னையில் நடந்த ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் கலந்துகொண்டதாக இரண்டு வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
சென்னையில் நடந்த 'ஃபார்முலா 4' கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பட்டியலில் நிவேதா பெத்துராஜின் பெயர் இல்லை.

எனவே பரவக்கூடிய வீடியோ குறித்துத் தேடினோம். நிவேதா பெத்துராஜின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீழ்காணும் வீடியோ 2021, ஜூலை மாதம் பதிவிடப்பட்டுள்ளது. அப்பதிவில் ‘F1, Formula1’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை குறிப்பிட்டு 2021ஆம் ஆண்டே ‘Indiaglitz’ தளத்திலும் இவர் கார் பந்தய பயிற்சி பெறுவது தொடர்பாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தனது காரை அறிமுகம் செய்வதாக நிவேதா பேசக்கூடிய மற்றொரு வீடியோ குறித்துத் தேடியதில், அதுவும் 2021 செப்டம்பர் மாதமே பல யூடியூப் பக்கங்களில் இருப்பதைக் காணமுடிந்தது.
இவற்றிலிருந்து சென்னையில் நடந்த F1 கார் பந்தயத்தில் நிவேதா பெத்துராஜ் கலந்துகொள்ளவில்லை என்பதையும் பரவக்கூடிய வீடியோக்கள் 2021ம் ஆண்டில் இருந்தே சமூக வலைத்தளங்களில் உள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
அதுமட்டுமின்றி நிவேதா 2021ம் ஆண்டே F1 பந்தயத்திற்குப் பயிற்சி பெறத்தொடங்கியுள்ளார். அப்படி இருக்கையில் அதனைக் காட்டிலும் சிறிய அளவிலான F4 பந்தயத்தில் அவர் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
முடிவு:
சென்னையில் நடந்த F4 கார் பந்தயத்தில் நிவேதா பெத்துராஜ் கலந்து கொண்டதாகப் பரவும் வீடியோக்கள் 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவை. சமீபத்தில் சென்னையில் நடந்த கார் பந்தயத்தில் நிவேதா கலந்துகொள்ளவில்லை.
