YouTurn

வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் சிலர் இறந்துவிட்டதாக பரப்பப்படும் வதந்தி!

வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் சிலர் இறந்துவிட்டதாக பரப்பப்படும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உடல்நலக் குறைவு ஏற்பட்ட அனைத்து மாணவர்களும் உடல்நலம் தேறி நலமுடன் வீடு திரும்பிவிட்டனர்.

பரவிய செய்தி

400 பேர் வாந்தி மயக்கம், 5 மேல இறந்துட்டாங்கன்னு செய்தி வருது ஆனா இத பத்தி எந்த நியூஸ் சேனலும் பெருசா போடல. போட்ட ஒரு சேனல் அந்த பதிவை நீக்கிருச்சு

விரிவான விளக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் பகுதியில் இயங்கிவரும் எக்செல் பொறியியல் கல்லூரியின் விடுதிகளில் சுகாதாரக் கேடான உணவு மற்றும் குடிநீரால் பல மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சுமார் 128 மாணவர்கள் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி முதல் மூன்று நாட்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில், கல்லூரி விடுதியில் உணவு காரணமாக 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 5 பேர் இறந்துவிட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.


 

உண்மை என்ன?

 

நாமக்கலில் சுகாதாரக் கேடான உணவு காரணமாக தனியார் கல்லூரி மாணவர்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது குறித்த செய்திகளை தேடுகையில், அக்டோபர் 29ஆம் தேதி ‘The Hindu’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியைக் காணமுடிந்தது.


 

அதன்படி, குமாரபாளையத்தில் உள்ள எக்செல் கல்லூரி விடுதியில் சுகாதாரக் கேடான உணவு காரணமாக மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின் பெயரில் நவம்பர் 2ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட 128 மாணவர்களும் புற்றுநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அனைத்து மாணவர்களும் உடல்நலம் தேறி நலமுடன் இருப்பதாகவும்’ தெரிவித்தார்.

 

இதிலிருந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாரும் இறக்கவில்லை என்பது தெரியவருகிறது.


அதேபோல், நாமக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் சிலரால் பரப்பப்படுவது தவறாக தகவல்’ என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் எச்சரித்துள்ளது காவல்துறை.

 

முடிவு:

 

தனியார் கல்லூரி விடுதியில் சுகாதாரக் கேடான உணவு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்ட மாணவர்களில் சிலர் இறந்துவிட்டதாக பரப்பப்படுவது தவறான தகவலாகும். அனைத்து மாணவர்களும் உடல்நலம் தேறி நலமுடன் வீடு திரும்பிவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க