யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிலேயே ‘ஹமீத் அவ்லியா தர்கா’ இருக்கிறது. இதை தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் சாமி தரிசனம் செய்தது குறித்து கடந்த வாரம் புகைப்படங்களை தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர் பதிவு செய்த புகைப்படங்களைக் குறிப்பிட்டு, ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் தர்கா உள்ளதா என்று குறிப்பிட்டு பலரும் அவர் தர்காவில் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
தர்கா
கோயிலில் இருக்கா 🤔🤔🤔??? https://t.co/VbRqlpPbfv pic.twitter.com/YE0D42N9oZ
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், அது ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்குள் அமைந்துள்ள தர்கா அல்ல என்பதை உறுதி செய்ய முடிந்தது.
காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் ‘ஹஜ்ரத் சையத் ஷாஹ் ஹமீது அவுலியா பாதுஷா சிஷ்தி தர்கா’ இருக்கிறது.
இந்நிலையில் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான் பாண்டியன், அருகில் உள்ள ஹமீத் அவ்லியா தர்காவிற்கும் சென்றுள்ளார். கோவில், தர்கா ஆகியவற்றின் புகைப்படத்தை ஒன்றாக பதிவிட்டுள்ளார். இதனை தவறாக புரிந்துகொண்டு கோவிலுக்குள் தர்கா இருப்பதாகக் கூறி பலரும் தவறாகப் பரப்புகின்றனர்.
இன்றைய தினம் 12.03.2026 "தேவேந்திரகுல வேளாளர்" சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில் முதல் மரியாதை , பரிவட்டம் மற்றும் "புஷ்ப பல்லக்கு விழா" மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் தேவேந்திரகுல வேளாளர்களின் சார்பாக காஞ்சி ஸ்ரீ… pic.twitter.com/RmQUiSIBcN
பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அமைந்துள்ள இந்த தர்கா குறித்தும், அங்கு சந்தனக்குட உருஸ் உத்சவம் விழா நடைபெறுவது குறித்தும் செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு:
நம் தேடலில், காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்குள் தர்கா அமைந்துள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பது தெளிவாகிறது.
