YouTurn

பிரிட்டிஷ் ராணிக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுத்து நிற்பது உண்மையா ?

பிரிட்டிஷ் ராணிக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுத்து நிற்பது உண்மையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அணிவகுத்து பிரிட்டிஷ் ராணிக்கு மரியாதை செலுத்திய காட்சி என மேற்காணும் புகைப்படம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல ஆண்டுகளாக பரவி கொண்டே இருக்கிறது. சமீபத்திலும் இப்படம் பகிரப்பட்டு வருவதால், அதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பில்...

பரவிய செய்தி

இவர்களா தேச பக்தர்கள் ? விடுதலை போராட்ட போராளிகளை காட்டிக் கொடுத்து ஆங்கிலேயர்களுக்கு அணி வகுத்து மரியாதை செய்யும் ஆர்.எஸ்.எஸ்



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அணிவகுத்து பிரிட்டிஷ் ராணிக்கு மரியாதை செலுத்திய காட்சி என மேற்காணும் புகைப்படம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல ஆண்டுகளாக பரவி கொண்டே இருக்கிறது.

சமீபத்திலும் இப்படம் பகிரப்பட்டு வருவதால், அதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பிரிட்டிஷ் ராணிக்கு மரியாதை செலுத்த அணிவகுத்து நிற்பதாக பரவும் புகைப்படம் போலியானவையே.

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் அணிவகுத்து இருக்கும் புகைப்படத்தை மட்டும் கட் செய்து ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், உண்மையான புகைப்படம் 2016-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி டெக்கான் கிரோனிக்கல் இணையதள செய்தியில் வெளியாகி இருக்கிறது.



2016-ல் வெளியான புகைப்படத்தில் பிரிட்டிஷ் ராணியின் புகைப்படம் இடம்பெறவில்லை. அடுத்ததாக, பிரிட்டிஷ் ராணியின் புகைப்படம் குறித்து தேடுகையில், 2018-ம் ஆண்டில் historyville என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு கிடைத்தது.



Twitter link | archived link

1956-ல் இரண்டாம் எலிசபெத் ராணி நைஜீரியாவிற்கு வருகை தந்திருந்த பொழுது நைஜீரியன் ராணுவத்தின் ராயல் வெஸ்ட் ஆப்ரிக்கன் எல்லை படையினரை (ராணியின் படைவகுப்பணி) மேற்பார்வையிட்டதாக குறிப்பிட்டு உள்ளனர்.



இதேபோல், 2016-ல் CNN இணையதளத்தில் இரண்டாம் எலிசபெத் ராணி உலகம் நாடுகளுக்கு சென்ற புகைப்படத் தொகுப்பில் நைஜீரியா சென்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.

2016-ல் டெக்கான் கிரோனிக்கல் செய்தியில் வெளியான ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பின் புகைப்படத்தையும், 2016-ல் CNN இணையதளத்தில் வெளியான இரண்டாம் எலிசபெத் நைஜீரியா சென்ற புகைப்படத்தையும் போட்டோஷாப் செய்து தவறான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.



கடந்த 2018-ம் ஆண்டில் பிரிட்டிஷ் ராணிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அணிவகுத்து நிற்கும் வைரல் புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டவை என யூடர்ன் மீம் பதிவு மூலம் உண்மையான புகைப்படத்தை வெளியிட்டு இருந்தோம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…