YouTurn

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் பாமக கொடி பறக்கவிடப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ!

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் பாமக கொடி பறக்கவிடப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோவில் இருப்பது, புக்கரெஸ்ட் நகரத்தில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது ருமேனியா நாட்டுக்கொடியின் வண்ணங்கள் உமிழ்ந்து சாகசம் செய்யும் விமானம்.

பரவிய செய்தி

இவனுங்க வேற சாகசம் சொல்லிட்டு பாமக கட்சி கொடியை பறக்க விடறாங்க. அதுவும் திராவிட முதலமைச்சர் முன்னால்.



X Link

விரிவான விளக்கம்

இந்திய விமானப் படையின் 92ஆவது நிறுவன ஆண்டை கொண்டாடும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 72 விமானங்கள் வானில் பறந்து, வண்ணப்புகைகளை உமிழ்ந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியது. இதனைக்காண தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் வந்திருந்தார். இதற்கிடையில், இந்த விமான சாகச நிகழ்ச்சியில் முதல்வரின் முன்னிலையில் பாமக கொடியின் வண்ணங்களை உமிழ்ந்து சாகசம் செய்யப்பட்டதாக எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பரப்பப்பட்டது.

https://x.com/i/web/status/1843259244797481438



உண்மை என்ன?


பரப்பப்பட்ட வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில் ’Shutter Stock’ என்னும் புகைப்படத் தளத்தில் வீடியோவுடன் ஒத்துப்போகும் புகைப்படம் ஒன்று இருப்பதைக் கண்டோம். அதன்கீழ் ’ருமேனியாவில் புக்கரெஸ்ட் என்னும் நகரத்தில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி’ என்று பதிவிடப்பட்டிருந்தது. 



இந்த விவரங்களைக் கொண்டு இணையத்தில் மேலும் தேடுகையில், புக்கரெஸ்ட் நகரத்தில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் வீடியோ FotostefanRo’ என்னும் யூட்யூப் தளத்தில் இருந்தது. 17.27 நிமிடங்கள் நீளமுள்ள அந்த வீடியோவில் 15.27 ஆவது நிமிடம் பரப்பப்பட்ட வீடியோ துணுக்கில் நாம் கண்ட அதே காட்சி இடம் பெற்றிருப்பதை பார்த்தோம். 



இதிலிருந்து இந்த வீடியோ ருமேனியா நாட்டின் புக்கரெஸ்ட் நகரத்தில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. 


முடிவு:


ருமேனியா நாட்டின் புக்கரெஸ்ட் நகரத்தில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ துணுக்கு, சென்னையில் நடந்த விமான சாசக நிகழ்ச்சியின்போது பாமக கொடி பறக்கவிடப்பட்டதாக தவறாக பரப்பப்படுகிறது. இந்த வீடியோவில் இருப்பது ருமேனியா நாட்டின் கொடி, பாமக கொடி அல்ல.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க