யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
டெல்லியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து உலகப்புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இதனால், ரிஹானா பதிவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் நடிகை கங்கனா உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
இந்நிலையில், பாடகி ரிஹானா பாகிஸ்தான் நாட்டின் கொடியுடன் இருப்பதாக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இந்திய அளவில் ரிஹானாவின் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா தலைவர் அபிஷேக் மிஷ்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ரிஹானா உடைய பழைய ட்வீட்கள் மற்றும் பாகிஸ்தான் கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ரிஹானா மேற்கிந்திய தீவுகள் அணியின் கொடியுடன் இருக்கும் புகைப்படத்தில் பாகிஸ்தான் கொடியை ஃபோட்டோஷாப் செய்துள்ளனர்.
Twitter link | Archive link
2019 ஐசிசி உலகக் கோப்பை ஆட்டத்தில் டர்ஹாமில் உள்ள செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நடந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் கொடியை ஏந்தி புகைப்படம் எடுத்துள்ளார்.

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்த பாடகி ரிஹானா பாகிஸ்தான் நாட்டின் கொடியுடன் இருப்பதாக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட தவறான புகைப்படத்தை அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் பகிர்ந்து வருகிறார்கள்.
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
இந்நிலையில், பாடகி ரிஹானா பாகிஸ்தான் நாட்டின் கொடியுடன் இருப்பதாக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இந்திய அளவில் ரிஹானாவின் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா தலைவர் அபிஷேக் மிஷ்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ரிஹானா உடைய பழைய ட்வீட்கள் மற்றும் பாகிஸ்தான் கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ரிஹானா மேற்கிந்திய தீவுகள் அணியின் கொடியுடன் இருக்கும் புகைப்படத்தில் பாகிஸ்தான் கொடியை ஃபோட்டோஷாப் செய்துள்ளனர்.
Look who's at #SLvWI to Rally 'round the West Indies!
Watch out for @rihanna's new single, Shut Up And Cover Drive 😉🎶 #CWC19 | #MenInMaroon pic.twitter.com/cou1V0P7Zj
— ICC (@ICC) July 1, 2019