YouTurn

ரவீந்திரநாத் குமார் தேர்தலில் பிரசாந்த் கிஷோருக்கு சவால் விடுவதாக வதந்தி !

ரவீந்திரநாத் குமார் தேர்தலில் பிரசாந்த் கிஷோருக்கு சவால் விடுவதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் சார்ந்த சூத்திரங்களை வகுக்கக்கூடிய பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து வருகிற சட்டசபைத் தேர்தலில் செயல்பட இருப்பதாக உறுதியான தகவலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், அதிமுக-வின் தேனி தொகுதி எம்.பி ரவீந்திரநாத் குமார், " பிரசாந்த் கிஷோர்...

பரவிய செய்தி

பிரசாந்த் கிஷோர் என்ன யார் வந்தாலும் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து மோடிஜி காலடியில் சமர்பிப்போம் - ரவீந்திரநாத் எம்.பி



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் சார்ந்த சூத்திரங்களை வகுக்கக்கூடிய பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து வருகிற சட்டசபைத் தேர்தலில் செயல்பட இருப்பதாக உறுதியான தகவலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், அதிமுக-வின் தேனி தொகுதி எம்.பி ரவீந்திரநாத் குமார், " பிரசாந்த் கிஷோர் என்ன யார் வந்தாலும் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து மோடிஜி காலடியில் சமர்பிப்போம்" என தெரிவித்து உள்ளதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று முகநூலில் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த செய்தியின் தன்மை குறித்து அறிய தந்தி டிவி செய்தியின் முகநூல் பக்கத்தில் பிப்ரவரி 3-ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஆராய்ந்த பொழுது அத்தகவல் போலியானவை என்பதை அறிய முடிந்தது.



பிப்ரவரி 3-ம் தேதி வெளியான உண்மையான நியூஸ் கார்டில், " தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தமிழில் வாழ்த்து " என தந்தி செய்தியில் வெளியாகி இருக்கிறது. அதை போட்டோஷாப் செய்து போலியான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…