YouTurn

திமுக ஆட்சியில் ரேசன் அரிசி மூட்டையை சாக்கடையில் கொட்டி அள்ளுவதாக பரவும் 2017-ல் வெளியான வீடியோ !

திமுக ஆட்சியில் ரேசன் அரிசி மூட்டையை சாக்கடையில் கொட்டி அள்ளுவதாக பரவும் 2017-ல் வெளியான வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திமுக அரசின் ஆட்சி அவலம். பள்ளத்தில் லாரி பதியாமல் இருக்க ரேசன் கடை ஊழியர்கள் ரேசனுக்கு வந்த அரிசி மூட்டை வைத்து லாரியை கடக்க செய்து சாக்கடையில் கொட்டிய அரிசியை மீண்டும் அள்ளி ரேசன் கடைக்கு கொண்டு செல்லும் காணொளி காட்சி.

விரிவான விளக்கம்

ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வரும் லாரி சாலையில் உள்ள பள்ளத்தில் பதியாமல் இருக்க ரேசன் கடை ஊழியர்கள் அரிசி மூட்டை வைத்து லாரியை கடக்க செய்கிறார்கள், அப்போது மூட்டையில் இருந்து சாக்கடையில் கொட்டிய அரிசியை மீண்டும் அள்ளி ரேசன் கடைக்கு கொண்டு செல்லும் 3 நிமிட வீடியோ காட்சி ஒன்று திமுக ஆட்சியைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







Archive link 

உண்மை என்ன ? 

ரேசன் அரிசி மூட்டையை லாரி கடக்க பயன்படுத்திய வீடியோ குறித்து தேடிய போது, 2017-ம் ஆண்டில் சமூக வலைதளங்களிலும், ஊடகத்திலும் இவ்வீடியோ பதிவாகி இருந்ததை பார்க்க முடிந்தது.



2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் 36வது வார்டில் உள்ள ரேசன் கடைக்குஅரசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்காமல் இருக்க அரிசி மூட்டையை வைத்து உள்ளனர். லாரியின் எடை தாங்காமல் கோணிப்பை கிழிந்து மொத்த அரிசியும் வீணான அவலம் " என பாலிமர், புதியதலைமுறை உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.





முடிவு : 

நம் தேடலில், திமுக அரசின் ஆட்சியில் பள்ளத்தில் லாரி பதியாமல் இருக்க ரேசன் கடை ஊழியர்கள் ரேசனுக்கு வந்த அரிசி மூட்டை வைத்து லாரியை கடக்க செய்து சாக்கடையில் கொட்டிய அரிசியை மீண்டும் அள்ளி ரேசன் கடைக்கு கொண்டு செல்லும் காட்சி எனப் பரப்பப்படும் வீடியோ கடந்த 2017-ல் அதிமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க