YouTurn

ரத்தன் டாடாவை வைத்து பரப்பப்படும் வதந்திகளின் தொகுப்பு !

ரத்தன் டாடாவை வைத்து பரப்பப்படும் வதந்திகளின் தொகுப்பு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

1500 கோடிக்கான காசோலையை பிரதமரிடம் கொடுத்துவிட்டு சொன்னார் ஜி இந்த 1500 கோடி நிதி போதவில்லை என்றால் தேவைப்பட்டால் என் இந்திய நாட்டிற்காக என் மொத்த சொத்து 6 லட்சம் கோடியையும் தருவதற்கு தயாராக இருக்கிறேன் என்றார்.



Facebook link

விரிவான விளக்கம்

கடந்த ஆண்டில் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவை தாக்கிய போது கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மற்றும் நிவாரண நிதியாக 1,500 கோடி வழங்குவதாக ரத்தன் டாடா அறிவித்தார். அதில், மருத்துவ உபகரணங்கள் உதவியும் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்படும் என்கிற அறிவிப்புகளும் வெளியாகின.

ரத்தன் டாடா மீது இந்திய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் இருந்து வருகிறது. எனினும், 1,500 கோடி நிதியை அளித்து விட்டு வேண்டுமென்றால் தன்னுடைய மொத்த சொத்துக்களையும் நாட்டிற்காக வழங்க தயார் என ரத்தன் டாடா கூறியதாக ஓர் தகவல் கடந்த ஆண்டில் இருந்தே பரவிக் கொண்டிருக்கிறது.



தற்போதும், கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க தன்னுடைய முழு சொத்தையும் அளிக்க தயாராக இருப்பதாக ரத்தன் டாடா கூறினார் என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை என்ன ?



Twitter link 

ரத்தன் டாடா தன்னுடைய மொத்த சொத்தையும் இந்தியாவிற்கு அளிக்க தயாராக இருப்பதாக கூறினார் என சமூக வலைதளங்களில் மட்டுமே சுற்றி வருகிறது. அவ்வாறான, பேச்சுகளோ, அதிகாரப்பூர்வ தகவல்களோ அல்லது செய்தியோ கூட எங்கும் வெளியாகவில்லை.



Twitter link 

" நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை அதிகரிக்கும் அரசின் முயற்சியில் உதவி செய்வதாக " டாடா குழுமம் 2021 ஏப்ரல் மாதம் ட்வீட் வெளியிட்டு இருந்தது. ரத்தன் டாடா கூறாத ஒன்றையும் இணைத்து பகிர்ந்து வருகிறார்கள்.

ஃபார்வர்டு செய்தி 2 :



" இந்தாண்டு உயிரோடு இருப்பதே லாபத்திற்கு ஈடானது ஆகவே கனவுகள், திட்டங்கள் பற்றி கவலைப்படாமல் இருங்கள் - தொழிலதிபர் ரத்தன் டாடா  " என நியூஸ் டெம்பிளேட் ஒன்று  சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



Twitter link 

ஆனால், இப்படியொரு கருத்தை ரத்தன் டாடா கூறவில்லை. கடந்த ஆண்டில் இந்தியில் அவரின் புகைப்படத்துடன் பரவிய அதே ஃபார்வர்டு தகவலை அவரே மறுத்து ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

ஃபார்வர்டு செய்தி 3 :

கடந்த ஆண்டில், கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை காணும் என நிபுணர்கள் கூறியதற்கு ரத்தன் டாடா கூறிய கருத்து என பரவிய ஃபார்வர்டு தகவலை அவரே மறுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.



Twitter link 

மேலும் படிக்க : பொருளாதாரம் குறித்து ரத்தன் டாடாவின் கருத்து என போலியான போஸ்ட் !

ரத்தன் டாடா தன்னுடைய அறிவிப்புகளை ட்விட்டரில் பதிவிடுவது வழக்கம். தன் பெயரை பயன்படுத்தி பரவும் தவறான தகவல்களை மறுத்து பதிவிட்ட போதும் அதையே தெரிவித்து இருப்பார்.

முடிவு :

நம் தேடலில், 1,500 கோடி மட்டுமல்ல தன்னுடைய மொத்த சொத்துக்களையும் நாட்டிற்கு அளிப்பதாக ரத்தன் டாடா கூறினார் என பரப்பப்படும் தகவல் வதந்தியே. இதுமட்டுமின்றி, ரத்தன் டாடா கூறியதாக பல போலியான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க