YouTurn

வரிக்குதிரை வடிவில் பிறந்த பசுக் கன்றா ?

வரிக்குதிரை வடிவில் பிறந்த பசுக் கன்றா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சில விலங்குகள் பார்ப்பதற்கு அரிதாக, வித்தியாசமாக தோன்றும். ஏன் என்றால் அவற்றை பற்றி நாம் பெரிதும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் தான். ஜூலை மாதம் 2018-ல் சிவகார்த்திகேயன் என்ற முகநூல் பக்கத்தில் , " வரிக்குதிரை வடிவில் பிறந்த பசுக் கன்று " என பதிவிடப்பட்டது. அந்த பதிவு 2 ஆயிரம் ஷேர்களை...

பரவிய செய்தி

வரிக்குதிரை வடிவில் பிறந்த பசுக் கன்று . ஷேர் செய்யுங்கள். அனைவரும் அறியட்டும்.

விரிவான விளக்கம்

சில விலங்குகள் பார்ப்பதற்கு அரிதாக, வித்தியாசமாக தோன்றும். ஏன் என்றால் அவற்றை பற்றி நாம் பெரிதும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் தான்.



ஜூலை மாதம் 2018-ல் சிவகார்த்திகேயன் என்ற முகநூல் பக்கத்தில் , " வரிக்குதிரை வடிவில் பிறந்த பசுக் கன்று " என பதிவிடப்பட்டது. அந்த பதிவு 2 ஆயிரம் ஷேர்களை பெற்று இன்றும் ஷேர் ஆகி வருகிறது..

உண்மையில் அது கன்று தான், ஆனால் பசுக் கன்று அல்ல. போங்கோ எனும் அரிதான மலை மான் வகை விலங்கு..



இவை , மேற்கு ஆப்ரிக்கா, காங்கோ, தெற்கு சூடான் உள்ள மழைக்காடுகளில் காணப்படும். மேலும், பல்வேறு உயிரியல் பூங்காவில் அரிதாக காணப்படுகின்றன.

மான் வகையைச் சேர்ந்த போங்கோ  பார்ப்பதற்கு பெரிதாக மற்றும் எடை அதிகமானதும் கூட எனலாம். அதன் எடை 225கி முதல் 410 கி வரை இருக்கும்.



இளம் கன்று பசுக் கன்று போல் தெரியலாம். ஆனால் வளர்ந்த பிறகு மானுக்கே உண்டான கொம்புகள் வளரும்.

போங்கோ மான் கன்றினை வரிக்குதிரை வடிவில் பிறந்த பசு என தவறான செய்தியை பரப்பி உள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.