யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
ராமர் பிராண பிரதிஷ்டை அண்டார்டிகாவில் கொண்டாட்டம்: தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், வெங்கடேசன் கிருஷ்ணன், வெங்கட சுப்ரமணியம் ராஜு மூவரும் கப்பல் பயணமாக அண்டார்டிகாவுக்கு சென்றனர். அயோத்தி கோவிலில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்ததை மூவரும் அண்டார்டிகாவில் கொண்டாடி மகிழ்ந்தனர் - தினமலர்
X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
கப்பல் பயணமாக அண்டார்டிகாவுக்கு சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர், அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதை முன்னிட்டு அண்டார்டிகாவில் கொண்டாடி மகிழ்ந்தனர் என்று கூறி "ஜெய் ஸ்ரீ ராம்" என்று எழுதப்பட்ட அண்டார்டிகா கொடியை மூன்று பேர் பிடித்துக்கொண்டு நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை, தினமலர் தனது சமூக ஊடகப்பக்கங்களில் செய்தியாக வெளியிட்டுள்ளது.
தினமலரைப் போன்றே Free Press Journal என்ற இணையதளத்திலும் இதே புகைப்படம் குறிப்பிடப்பட்டு நேற்று (ஜனவரி 23) செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், "ஜெய் ஸ்ரீ ராம்" என்று எழுதப்பட்ட புகைப்படம் உண்மையானது அல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் இந்த புகைப்படத்துடன் தொடர்புடைய உண்மையான வீடியோ, தமிழ்நாட்டிலிருந்து கப்பல் பயணமாக அண்டார்டிகாவுக்கு சென்ற வெங்கட சுப்ரமணியம் ராஜு என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (rajuvsm) கடந்த ஜனவரி 20 அன்று "வெங்கட் & சந்திராவுடன் 7வது கண்டமான அண்டார்டிகாவில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது" என்று குறிப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
ஆனால் அதில் எங்கும் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வாசகம் குறிப்பிடப்படவில்லை. அதேபோல், அயோத்தி ராமர் கோயில் குறித்தும் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே உண்மையான புகைப்படத்தில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று இருப்பது போன்று எடிட் செய்து சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை வைத்து செய்தி வெளியிட்ட தினமலர் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து இச்செய்தியை நீக்கி இருக்கிறது.
மேலும் படிக்க: பூரி ஜெகன்நாதர் யாத்திரை கூட்டத்தின் படத்தை அயோத்தி எனப் பதிவிட்ட பாஜகவின் இராம ஸ்ரீநிவாசன் !
முடிவு:

நம் தேடலில், ராமர் பிராண பிரதிஷ்டை அண்டார்டிகாவில் கொண்டாட்டம் என்று தினமலர் வெளியிட்ட செய்தி தவறானது என்பதையும், உண்மையான புகைப்படத்தில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வாசகம் குறிப்பிடப்படவே இல்லை என்பதையும் அறிய முடிகிறது.