YouTurn

கொரோனாவை பரப்பும் ராமர் மாநாடு என தவறாக பரவும் பழைய வீடியோ !

கொரோனாவை பரப்பும் ராமர் மாநாடு என தவறாக பரவும் பழைய வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கொரோனாவை பரப்பும் ராமர் மாநாடு இந்த பாய்ங்க தொல்ல தாங்க முடியலப்பா.. இந்த வீடியோவை பகிர்பவர்களுக்கு கொரோனா தாக்கும் இப்படிக்கு சங்கீ.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராம்ஜன்மபூமியில் ராமர் கோவில் கட்ட நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்நிலையில், கொரோனாவை பரப்பும் ராமர் மாநாடு என கீழ்காணும் வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மை அறிய தீர்மானித்தோம்.


Facebook link | archive link 

InVID மூலம் கொரோனாவை பரப்பும் ராமர் மாநாடு என பரப்பப்படும் 30 நொடிகள் கொண்ட வீடியோவில் இருந்து ஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் கடந்த 2019-ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் யூடியூப் சேனல்களில் இவ்வீடியோ இடம்பெற்று இருக்கிறது என்பதை அறிய முடிந்தது.



காவிக் கொடிகள், டிஸ்க்கோ உபகரணங்கள் உடன் கூட்டமாய் ஆடிப்பாடும் மக்களின் வீடியோ 2019-ல் டிக்டாக், ஹலோ அப், ஷேர்சாட், யூடியூப் உள்ளிட்டவையில் அதிகம் பகிரப்பட்டு உள்ளது. ஷேர் சாட் செயலில் பின்னனியில் வேறு பாடலைக்  கொண்டு வெளியான வீடியோவை யூடியூப் உள்ளிட்டவையில் பகிர்ந்து இருக்கிறார்கள்.



பழைய வீடியோ என உறுதி செய்ய முடிந்தாலும், மக்கள் கூட்டமாய் கொண்டாட்டத்தில் இருக்கும் வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. தகவல் கிடைக்கும்பட்சத்தில் அதையும் இணைக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், கொரோனாவை பரப்பும் ராமர் மாநாடு என பரப்பப்படும் வீடியோ கடந்த ஆண்டில் வைரலாகி உள்ளது என்பதையும், இதற்கும் கொரோனா காலத்திற்கும் தொடர்பில்லை என தெளிவாய் தெரிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க