YouTurn

ரஜினியுடன் இருப்பது போலீஸ் வேடத்தில் மாணவர்களை தாக்கியவரா ?

ரஜினியுடன் இருப்பது போலீஸ் வேடத்தில் மாணவர்களை தாக்கியவரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடிய மாணவர்களின் மீது போலீஸ் உடையில் தாக்கிய நபர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி உடைய உறுப்பினர் என்றும், அவரின் பெயர் பாரத் சர்மா என முகநூல் பக்கத்தின் ஸ்க்ரீன்ஷார்ட் உள்ளிட்டவை இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது...

பரவிய செய்தி

ரஜினியின் ஆன்மீக அரசியல்.. போலீஸ் வேடத்தில் பெண்களை தாக்கிய ஆர்எஸ்எஸ் உறுப்பினர் உடன் ரஜினிகாந்த்.



Twitter link | archived link 

விரிவான விளக்கம்

டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடிய மாணவர்களின் மீது போலீஸ் உடையில் தாக்கிய நபர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி உடைய உறுப்பினர் என்றும், அவரின் பெயர் பாரத் சர்மா என முகநூல் பக்கத்தின் ஸ்க்ரீன்ஷார்ட் உள்ளிட்டவை இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் படிக்க : போலீஸ் வேடத்தில் வந்து மாணவர்களை தாக்குவது ABVP-ஐ சேர்ந்தவரா ?



ஆனால், போலீஸ் உடையில் இருக்கும் நபர் ஏபிவிபி உடைய உறுப்பினர் பாரத் சர்மா இல்லை என ஆதாரத்துடன் யூடர்ன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இதற்கிடையில், போலீஸ் உடையில் பெண்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரும், நடிகர் ரஜினிகாந்தும் சந்தித்துக் கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படம் என ஓர் மீம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?  

நடிகர் ரஜினிகாந்த் உடன் இருக்கும் நபர் போலீஸ் உடையில் மாணவர்களை தாக்கியதாக வைரலாகிய ஏபிவிபி உறுப்பினர் பாரத் சர்மாவோ அல்லது போலீஸ் உடையில் பெண்களை தாக்கியதாக கூறுவது போன்று ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரும் அல்ல. அவரின் பெயர் ஆஷிஷ் சர்மா.

இன்ஜினியராக பணியாற்றி வந்த ஆஷிஷ் சர்மா தனது பணியினை விட்டு விட்டு, 2017 ஆகஸ்ட் 22-ம் தேதி நாட்டில் குழந்தைகள் பிச்சை எடுக்கும் அவலம் நீங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் 17,000 கி.மீ நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.



ஆஷிஷ் சர்மாவின் பயணத்தில் 569 நாட்களுக்கு பிறகு சென்னையை வந்தடைந்தார். அப்பொழுது, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் சந்தித்ததாக livewire  என்ற இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

மேலும், ஆஷிஷ் சர்மா, ரஜினிகாந்த மற்றும் லதா ரஜினிகாந்த் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு லதா ரஜினிகாந்தின் ட்விட்டர் பக்கத்தில் 2019 மார்ச் 12-ம் தேதி வெளியாகி இருக்கிறது.



Twitter archived link 

மேலும், ஆஷிஷ் சர்மா தன்னுடைய 17,000 கிமீ நடைபயணம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கு அளித்த பேட்டி 2019 பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகி இருக்கிறது.

பிச்சை எடுக்கும் குழந்தைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நாடு முழுவதிலும் நீண்ட நடைபயணத்தை மேற்கொண்ட ஒருவரின் புகைப்படத்தை வைத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வதந்திகளை பரப்பி உள்ளனர். தவறான புகைப்படங்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.