YouTurn

ரஜினிகாந்த் திருப்பதியில் எடைக்கு எடை பணக்கட்டுகளை அளித்தாரா ?| உண்மை என்ன?

ரஜினிகாந்த் திருப்பதியில் எடைக்கு எடை பணக்கட்டுகளை அளித்தாரா ?| உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருப்பதி கோவிலுக்கு சென்ற பொழுது தனது எடைக்கு எடை பணக்கட்டுகளை துலாபாரம் அளித்ததாக ஓர் வீடியோ முகநூல், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. Facebook link | archived link Suresh Ram என்பவர் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என்ற முகநூல் குழுவில் பகிர்ந்த...

பரவிய செய்தி

தனது எடைக்கு எடை பணக் கட்டுகளை திருப்பதியில் செலுத்திய சிவாஜிராவ்.

விரிவான விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருப்பதி கோவிலுக்கு சென்ற பொழுது தனது எடைக்கு எடை பணக்கட்டுகளை துலாபாரம் அளித்ததாக ஓர் வீடியோ முகநூல், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.



Facebook link | archived link 



Suresh Ram என்பவர் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என்ற முகநூல் குழுவில் பகிர்ந்த பதிவு ஆயிரக்கணக்கான ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. பிற முகநூல் கணக்குகளில் பதிவான பதிவுகளும் வைரலாகத் தொடங்கி உள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் திருப்பதிக்கு சென்று தனது எடைக்கு நிகரான எடையில் பணக்கட்டுகளை வழங்கியதாக பரவி வரும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. ஆகையால், இந்த வீடியோ குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ?  



News link | archived link 

2011-ம் ஆண்டு filmibeat என்ற இணையதளத்தில் திருப்பதியில் ரஜினி.. ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் " என்ற தலைப்பில் வெளியான செய்தியில் , சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று மீண்டும் பழையபடி ஆரோக்கியமடைந்தார் . தனது உடல்நிலை சீரானதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் குடும்பத்தினர் உடன் திருமலைக்கு சென்றுள்ளார் " எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

ரஜினிகாந்த் திருப்பதிக்கு சென்றதாக பரவும் வீடியோ 2011-ல் அவர் உடல்நிலை சீரானதற்கு பிறகு குடும்பத்தினர் உடன் சென்ற பொழுது எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் இருப்பதை காணலாம். காணிக்கையாக துலாபாரம் செலுத்தினார் என செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

இருப்பினும், காணிக்கையாக என்ன செலுத்தி இருந்தார் என்பதே கேள்வியாக இருந்தது. ஆகையால், இது தொடர்பாக தகவல்களை தேடிய பொழுது, சமூக வலைதளங்களில் கூறுவது போன்று பணக்கட்டுகளை ரஜினிகாந்த் காணிக்கையாக வழங்கவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.



Youtube link | archived link  

2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி யூட்யூப் சேனல் ஒன்றில் " சன் டிவி " சேனலில் வெளியான சினிமா செய்தியில் ரஜினிகாந்த் திருப்பதி சென்று காணிக்கை செலுத்தியது குறித்து பேசி இருக்கிறார்கள். அதில், 2.30-வது நிமிடத்தில் ரஜினிகாந்த் எடைக்கு எடை கற்கண்டு கொடுத்ததாக கூறியுள்ளனர்.



மேலும், tirumalatirupationline என்ற இணையதளத்தில் திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் துலாபாரம் அளிப்பதில் என்ன என்ன கொடுக்கலாம் என குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவற்றில் அரிசி, சர்க்கரை, வெல்லம், கற்கண்டு மற்றும் நாணயங்களை அளிக்கலாம் எனத் தெரிவித்து உள்ளனர்.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, ரஜினிகாந்த் திருப்பதி கோவிலில் எடைக்கு எடை பணக்கட்டுகளை அளித்ததாக சமீபத்தில் பரவி வரும் வீடியோ 2011-ம் ஆண்டு ரஜினிகாந்த் திருப்பதிக்கு சென்ற பொழுது எடுக்கப்பட்டவை.

திருப்பதியில் ரஜினிகாந்த் துலாபாரமாக அளித்தது பணக்கட்டுகளை அல்ல, கற்கண்டுகளையே என்பதை கிடைத்த ஆதாரங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.