YouTurn

ரஜினிகாந்த் தன் சொத்துக்களை தமிழ் மக்களுக்கு உயில் எழுதினாரா ?

ரஜினிகாந்த் தன் சொத்துக்களை தமிழ் மக்களுக்கு உயில் எழுதினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

ரஜினிகாந்த் அவர்கள் அரசியலில் களமிறங்கப் போவதாக அறிவித்த சில நாட்களில் அவருடைய உயில் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன. ரஜினிகாந்த் தமிழ் மக்களுக்கு தன் சொத்து முழுவதையும் உயில் எழுதிக் கொடுத்தார். என் வாழ்க்கைக்கு பிறகு எனது அனைத்து சொத்துக்களும் தமிழக மக்களுக்கு தான்...

பரவிய செய்தி

ரஜினிகாந்த் தமிழ் மக்களுக்கு தன் சொத்துக்கள் முழுவதையும் உயில் எழுதிக் கொடுத்துள்ளார். தன் வாழ்க்கைக்கு பிறகு தனது அனைத்து சொத்துக்களும் தமிழ் மக்களுக்கே தான் என்று கூறியுள்ளார்.

விரிவான விளக்கம்

ரஜினிகாந்த் அவர்கள் அரசியலில் களமிறங்கப் போவதாக அறிவித்த சில நாட்களில் அவருடைய உயில் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன.

ரஜினிகாந்த் தமிழ் மக்களுக்கு தன் சொத்து முழுவதையும் உயில் எழுதிக் கொடுத்தார். என் வாழ்க்கைக்கு பிறகு எனது அனைத்து சொத்துக்களும் தமிழக மக்களுக்கு தான் போகும், என் சொத்தில் இருந்து ஒரு பைசா கூட என் குடும்பத்திற்கு போகாது. அனைத்தும் தமிழ் மக்களுக்கு தான் போகும் என்று ரஜினிகாந்த் உயில் எழுதி வைத்துள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற படையப்பா படத்தின் வெள்ளிவிழாவில் தனது உயில் பற்றி கூறியது யாதெனில், " என் பெயரில் உள்ள இந்த ஒன்றே கால் ஏக்கர் அளவுள்ள ராகவேந்திர மண்டபத்தை ராகவேந்திரா பப்ளிக் ட்ரஸ்ட்டுக்கு உயில் எழுதி தருகிறேன். தனது வாழ்க்கைக்கு பிறகு இந்த சொத்தில் வரும் அனைத்தும் வருமானமும் ட்ரஸ்ட்டுக்கு போகும். அதிலிருந்து அனைத்தும் தன்னை வாழவைத்த தமிழ் மக்களுக்கு செல்லும். அதில் ஒரு பைசாக் கூட எனது குடும்பத்திற்கு செல்லாது" என்று கூறியுள்ளார்.

அன்றைய காலக்கட்டத்தில் தனது சொத்தில் பாதி மதிப்புடைய ராகவேந்திரா மண்டபத்தை ராகவேந்திரா ட்ரஸ்ட்டுக்கு அளிப்பதாகக் கூறியதை, தனது சொத்துக்கள் முழுவதையும் தமிழக மக்களுக்கு அளிப்பதாக தவறாக எண்ணியுள்ளனர்.

சுருக்கமாக

நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தை மட்டுமே ட்ரஸ்ட்க்கு எழுதி தருவதாக அறிவித்தார். அதில், இருந்து கிடைக்கும் வருமானம் ட்ரெஸ்ட் மூலம் எளிய மக்களுக்கு செல்லும், தன் குடும்பத்தினருக்கு செல்லாது என அறிவித்ததை முழு சொத்தையும் அறிவித்ததாக தவறான செய்திகள் பரவி வருகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க