YouTurn

ராஜேந்திர பாலாஜி பேசியதை எடிட் செய்து பரப்பும் திமுக ஆதரவாளர்கள் !

ராஜேந்திர பாலாஜி பேசியதை எடிட் செய்து பரப்பும் திமுக ஆதரவாளர்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஏமாற்றி பிழைக்கின்ற கூட்டம் அண்ணா திமுக கூட்டம், உழைத்து பிழைக்கின்ற கூட்டம் திமுக கூட்டம் - ராஜேந்திர பாலாஜி



 

Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பிரச்சாரத்தின் போது, " ஏமாற்றி பிழைக்கின்ற கூட்டம் அண்ணா திமுக கூட்டம், உழைத்து பிழைக்கின்ற கூட்டம் திமுக கூட்டம் " எனக் கூறியதாக 8 நொடிகள் கொண்ட எடிட் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.







Archive link 

ராஜேந்திர பாலாஜி உண்மையை உடைத்ததாகக் கூறி திமுக ஆதரவாளர்கள் பலரும் இவ்வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், இந்த வீடியோவில் அவர் பேசுகையில் கட் செய்யப்பட்டது தெளிவாய் தெரிகிறது. மேலும், வைரல் செய்யப்படும் வீடியோவில் DMK4TN எனும் ஹாஸ்டாக்கும் இடம்பெற்று இருக்கிறது.



ராஜேந்திர பாலாஜி பேசிய முழு வீடியோ மார்ச் 15-ம் தேதி பாலிமர் செய்தியில் வெளியாகி இருக்கிறது. அதில், " இன்று ஸ்டாலின் அறிவித்து இருக்கும் தேர்தல் அறிக்கை எல்லாம் சீனி சக்கர சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா என்று தான் இருக்கிறது... ஏமாற்றி பிழைக்கின்ற கூட்டம் திமுக கூட்டம்.. உழைத்து பிழைக்கின்ற கூட்டம் அண்ணா திமுக கூட்டம் " என ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

இதன் காரணமாக, அவரின் பேச்சை அப்படியே மாற்றி எடிட் செய்த வீடியோவை வைத்து திமுகவினர் கிண்டல் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள். இவ்வீடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ என சிலருக்கு தெரிந்தாலும், பலரும் இதை உளறல் பேச்சு, உண்மை பேச்சு என தவறாக புரிந்து கொண்டு பரப்பி வருகிறார்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க