YouTurn

ராஜஸ்தானில் பாலை விட கோமியத்திற்கு அதிக விலையா ? | காரணம் என்ன ?

ராஜஸ்தானில் பாலை விட கோமியத்திற்கு அதிக விலையா ? | காரணம் என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ் செய்தித்தாளில் ராஜஸ்தான் மாநிலத்தில் கோமியமானது பாலை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை முகநூலில் பதிவிட்டு கிண்டல் செய்து இருந்த பதிவு ஒன்றை காண முடிந்தது. உண்மையில், ராஜஸ்தானில் 25 ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு லிட்டர் பாலின் விலையை விட மாட்டின் கோமியம் அதிக...

பரவிய செய்தி

ராஜஸ்தானில் படு கிராக்கி, கோமியம் லிட்டர் 30 ரூபாய், பால் 25 ரூபாய். வேளாண் பல்கலைக்கழத்திற்கு 500 லிட்டர் சப்ளை.

விரிவான விளக்கம்

தமிழ் செய்தித்தாளில் ராஜஸ்தான் மாநிலத்தில் கோமியமானது பாலை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை முகநூலில் பதிவிட்டு கிண்டல் செய்து இருந்த பதிவு ஒன்றை காண முடிந்தது.

உண்மையில், ராஜஸ்தானில் 25 ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு லிட்டர் பாலின் விலையை விட மாட்டின் கோமியம் அதிக விலையில் விற்பனை ஆகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தோம். ராஜஸ்தான் மாநில கோமியம் விற்பனை தொடர்பான தேடலில், 2018 ஜூலை மாதத்தில் பிஸ்னஸ் டுடே, டைம்ஸ்ஆஃப்இந்தியா உள்ளிட்டவையில் வெளியானச் செய்திகளை காண முடிந்தது.



ராஜஸ்தானில் Gir மற்றும் Tharparkar உள்ளிட்ட உயர் ரக பசு மாடுகளின் கோமியமானது மொத்த விற்பனை சந்தையில் லிட்டருக்கு 15 முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆகியது. அன்றைய தினத்தில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ22 முதல் 25 வரை ஆக இருந்தது.

பசு மாடுகளை வளர்பவர்கள் பாலின் மூலம் ஈட்டும் வருவாயை விட அதிக வருமானத்தை பசுவின் கோமியத்தில் இருந்து ஈட்டத் துவங்கினர். ஜெய்ப்பூரை சேர்ந்த கைலேஷ் குஜ்ஜர் என்பவர் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு கோமியத்தை விற்பனை செய்து வந்தார். கோமியத்தின் விலை அதிகரித்த காரணத்தினால் கோமியத்தை விற்பனை செய்ய தொடங்கிய நேரத்தில் ஈட்டிய வருவாயை விட 30 மடங்கு வருமானம் கிடைப்பதாக டைம்ஸ்ஆஃப்இந்தியாவிற்கு தெரிவித்து இருக்கிறார்.

இயற்கை விவசாயம் செய்பவர்கள் பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக மாட்டின் கோமியத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, மருத்துவ பயன்பாடுகளுக்கு மற்றும் ஆன்மீக சடங்குகளுக்கும் மக்கள் கோமியத்தை அதிகம் பயன்படுத்தியதால் அவற்றின் தேவை அதிகரித்தது.



கோமியத்தின் விலை அதிகரிப்பால் மாடுகள் வெளியேற்றும் கோமியம் தரையில் வீணாகாமல் சேமிக்கத் தொடங்கினர். இதற்காக இரவு நேரங்களில் மாடுகளை தவறாமல் கண்காணித்து வந்ததாகவும் கூறுகின்றனர்.

பால் வர்த்தகரான ஓம் பிரகாஷ் மீனா கூறுகையில், " ஜெய்ப்பூரில் கிர் இன மாடுகளின் கோமியத்தை வாங்கி ரூ.30 முதல் ரூ 50 வரையில் விற்பனை செய்து வருகிறேன். பயிர்களை பூச்சிகளின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்கள் மாட்டின் கோமியத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி, மங்கள நிகழ்ச்சிகளிலும் கோமியத்தை அதிக அளவிலான மக்கள் பயன்படுத்துகின்றனர் " எனத் தெரிவித்து இருந்தார்.

ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் அரசால் இயங்கும் மஹாரானா பிரதாப் பல்கலைக்கழகத்தில் இயற்கை விவசாயம் தொடர்பான திட்டங்களுக்கு மாதந்தோறும் 300 முதல் 500 லிட்டர் வரையிலான கோமியம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையில் செலவிடுகின்றனர்.

முடிவு :

கடந்த ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லிட்டர் பாலின் விலையை விட கோமியத்தின் விலை அதிகமாக இருந்தது உண்மையே. இயற்கை விவசாயம், மருத்துவ பயன்பாடுகள், ஆன்மீக சடங்குகள் ஆகியவற்றிற்கு மக்கள் அதிக அளவில் கோமியத்தை பயன்படுத்த தொடங்கியதால் கோமியத்தின் விலை பாலை விட உயர்ந்தது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…