YouTurn

ராஜஸ்தான் முதல்வர் நடனமாடி ஒரு பெண்ணை இடித்ததாகப் பரவும் பொய்!

ராஜஸ்தான் முதல்வர் நடனமாடி ஒரு பெண்ணை இடித்ததாகப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்தத் தகுதி இல்லன்னா பாஜகால பெரிய பதவி கிடைக்குமா? இவன் வேற யாரும் இல்ல நம்ம ராஜஸ்தானின் புதிய முதல்வர்


X link

விரிவான விளக்கம்

சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 199 தொகுதிகளில் 115 இடங்கள் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் சார்பில் பஜன்லால் சர்மா முதலமைச்சராகப் பதவியேற்றார்.



இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் என ஒருவர் நடனம் ஆடக்கூடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அந்த வீடியோவில் நடனம் ஆடுபவர் நடனம் ஆடிக்கொண்டே ஒரு பெண்ணை இடித்து விட்டு மன்னிப்பு கேட்கிறார். 

உண்மை என்ன ?

ராஜஸ்தான் முதல்வர் எனப் பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் ஆய்வு செய்ததில் அது பஜன்லால் சர்மா இல்லை என்பதை அறிய முடிந்தது. 



தற்போது பரவக் கூடிய வீடியோ முதலில் Ashwani Meena’ என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இருப்பது ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா எனப் பலரும் சமூக வலைத்தளத்தில் பரப்பியது அஸ்வனி மீனாவின் கவனத்திற்கு வந்துள்ளது.

இதையடுத்து, அந்த வீடியோவில் இருப்பது நான் தான் என்றும், யாரோ அதனை எடிட் செய்து ராஜஸ்தான் முதல்வர் பெயரை குறிப்பிட்டு வதந்தி பரப்புகின்றனர் என்றும்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த டிசம்பர் 31ம் தேதி பதிவிட்டுள்ளார்.




அஸ்வனி மீனா இது போன்று பல இடங்களில் நடனமாடி வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது பரவக் கூடிய வீடியோவில் இருக்கும் அதே இடத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவையும் அவரது பக்கத்தில் காண முடிகிறது. 



இவற்றில் இருந்து பரவக் கூடிய வீடியோவில் இருப்பது ராஜஸ்தான் முதல்வர் இல்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது. 

முடிவு: 

நம் தேடலில், ராஜஸ்தான் முதல்வர் நடனமாடி ஒரு பெண்ணை இடித்து விட்டார் எனப் பரவக் கூடிய வீடியோவில் இருப்பது பஜன்லால் சர்மா கிடையாது. அந்த வீடியோவில் நடனமாடுபவர் அஸ்வனி மீனா என்பதை அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க