யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியை வரவேற்ற மக்கள் கூட்டம்.

Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தில் கடந்த டிசம்பர் 7ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் நடைப்பயணம் தொடர்ந்தது.

Twitter link | Archive link
https://twitter.com/KammathuS/status/1600428266531487744
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜாவாத் மாவட்டத்தில் சாவாலியில் வரவேற்கத் திரண்ட மக்கள் கூட்டம் என சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சியினரால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரப்பப்படும் புகைப்படத்தினை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடினோம். ‘Doctor Wait’ என்ற டிவிட்டர் கணக்கிலில், 2022 டிசம்பர் 7ம் தேதி அப்புகைப்படம் குறித்து இரண்டு ஸ்கிரீன்ஷார்ட்களை பதிவிட்டுள்ளார். அப்பதிவில் ‘this is also correct’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/waitreborn/status/1600510672042876928?s=61&t=zcPAlCdAQACBrjTzsn1rkA
அந்த ஸ்கிரீன்ஷார்டில் Pankhuri Pathak என்பவர் பதிவிட்டதில் உள்ள இந்தி வாக்கியங்களை மொழிபெயர்த்துப் பார்த்தோம். அதில், ராஜஸ்தான் மாநிலம், ஜாவாத் மாவட்டத்தில் சாவாலியில் ராகுல் காந்தியை வரவேற்கத் திரண்ட மக்கள் கூட்டம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு ஸ்கிரீன் ஷார்டில், மதுரா ஜெய்குருதேவ் ஆசிரமத்தில் 2022, டிசம்பர் 3ம் தேதி நடைபெற்ற பூஜ்ய தாதா குரு மகாராஜின் புனித பண்டாரா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவதாக உள்ள ஸ்கிரீன் ஷார்டை கூகுல் லென்சில் மூலம் தேடிய போது, ‘கிருஷ்ண கமல்’ , ‘ஜெய்குருதேவ் ஆஷ்ரம் மதுரா’ என்ற பேஸ்புக் பக்கங்கள் மற்றும் ‘பங்கஜ் கி மஹ்ராஜ்’ என்ற ட்விட்டர் பக்கத்தில் தொடர்புடைய புகைப்படங்கள் காண முடிந்தது.

அந்த மூன்று பதிவுகளும் உத்தரப்பிரதேச மதுராவில் நடைபெற்ற மத நிகழ்வு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களது பதிவுகளில் அந்த நிகழ்வு குறித்துப் பல பதிவுகளை பார்க்க முடிந்தது. இந்த பதிவுகள் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் பதிவிடப்பட்டுள்ளது.
https://twitter.com/mahraajpankaj/status/1599106329498746881?s=46&t=lz1rO3PqSf4_T_OLJ6q0TA
பரப்பப்படும் புகைப்படம் ஒன்று ‘pankaj ki mahraaj’ டிவிட்டர் பதிவில் காண முடிகிறது. மேலும், Pankaj maharaj என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் 45திற்கும் மேற்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில், பரப்பப்படும் புகைப்படங்களும் உள்ளது.

முடிவு :
நம் தேடலில், ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியை வரவேற்கக் கூடிய மக்கள் கூட்டம் எனப் பகிரப்படும் புகைப்படங்கள் பார்த் ஜோடோ யாத்திரைக்கு வந்த கூட்டம் இல்லை. அது டிசம்பர் 3ம் தேதி உத்தரப் பிரதேசம் மதுராவில் நடைபெற்ற ஒரு மத விழாக் கூட்டம் என அறிய முடிகிறது.