YouTurn

முன்னாள் அமைச்சர் ராகுல் காந்திக்கு "ஷூ லேஸ்" கட்டி விட்டதாக பொய் செய்தி வெளியிட்ட நியூஸ் 18 தமிழ் !

முன்னாள் அமைச்சர் ராகுல் காந்திக்கு "ஷூ லேஸ்" கட்டி விட்டதாக பொய் செய்தி வெளியிட்ட நியூஸ் 18 தமிழ் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ராகுல் காந்திக்கு "ஷூ லேஸ்" கட்டி விட்ட முன்னாள் அமைச்சர்



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் முன்னாள் அமைச்சர் ராகுல் காந்திக்கு " ஷூ லேஸ் " கட்டி விட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, நியூஸ் 18 தமிழ் சேனலிலும் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. 

[video width="1280" height="720" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2022/12/0japr3CdYvmkqsxb.mp4"][/video]

செய்தியில், " ஹரியானாவில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ பயணத்தின் போது ராகுலின் ஷூ லேஸ் அவிழ்ந்தது. முன்னாள் அமைச்சர் ஜிதேந்தர் சிங், கீழே குனிந்து லேஸ் கட்டி விட்டார். தனக்கு உதவிப் புரிந்த மூத்தவரின் முதுகில் தட்டிக் கொடுத்த ராகுல் காந்தி. ராகுலுக்கு முன்னாள் அமைச்சர் " ஷூ லேஸ்" கட்டும் படம் வேகமாக பகிரப்படுகிறது" என இடம்பெற்று இருக்கிறது.



Archive link 

இதற்கு முன்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தேசிய பொறுப்பாளர் அமித் மாள்வியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " முன்னாள் ஒன்றிய அமைச்சர் பன்வார் ஜிதேந்தர் சிங் கீழே குனிந்து ராகுல் காந்திக்கு ஷூ லேஸ் கட்டி விட்டு உள்ளார் " என கடுமையாக விமர்சித்து 21 நொடிகள் கொண்ட வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் ராகுல் காந்தியின் வீடியோ குறித்து தேடுகையில், ஹரியானாவில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது ராகுல் காந்தியுடன் நடந்து வரும் முன்னாள் அமைச்சரின் ஷூ லேஸ் அவிழ்ந்து இருப்பதை கீழே உள்ள புகைப்படங்களில் காணலாம்.



அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், ஷூ லேஸ் அவிழ்ந்து உள்ளது என ராகுல் காந்தி கை காட்டுவதும், அதற்கு முன்னாள் அமைச்சர் ஜிதேந்தர் சிங் ராகுல் காந்தி முன்பாக அவிழ்ந்த தன்னுடைய ஷூ லேசைக் கட்டிக் கொள்ளும் காட்சி இடம்பெறுவதை பார்க்கலாம்.

[video width="352" height="640" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2022/12/NmehEKUmq3ew_H6h.mp4"][/video]

பாஜகவினரால் பரப்பப்பட்ட வீடியோ குறித்து முன்னாள் அமைச்சர் ஜிதேந்தர் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " பாஜகவிற்கு செய்ய தெரிந்த ஒரே விசயத்தை செய்கிறார்கள். அது பொய் மட்டுமே " எனக் கூறி தன்னுடைய ஷூ லேசைக் கட்டும் படத்தை பதிவிட்டு இருக்கிறார்.



Twitter link | Archive link

மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " பாஜக ஐடி பிரிவு பொய் செய்திகளை பரப்புகிறது. நடைபயணத்தின் போது என்னுடைய லேஸ் அவிழ்ந்து விட்டது, அதை பார்த்த ராகுல் காந்தி உடனே அதை கட்டுமாறு கூறினார் " என முன்னாள் அமைச்சர் ஜிதேந்தர் சிங் பேசும் வீடியோவை பதிவிட்டு உள்ளனர்.



Twitter link| Archive link 

முடிவு : 

நம் தேடலில், ஹரியானாவில் இந்திய இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது ராகுல் காந்திக்கு "ஷூ லேஸ்" கட்டி விட்ட முன்னாள் அமைச்சர் என நியூஸ் 18 தமிழ் மற்றும் பாஜக ஐடி விங் பொறுப்பாளர் அமித் மாள்வியா பரப்பும் செய்தி தவறானது. முன்னாள் அமைச்சர் ஜிதேந்தர் சிங் தன்னுடைய ஷூ லேசையே கட்டி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க