யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேடை ஒன்றில் மைக்கினை ஆன் செய்யாமல் பேசியதாக 30 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவை தமிழக பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், பாஜக திருவள்ளூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சரவணகுமார் முதற்கொண்டு பலரும் பதிவிட்டு வருகின்றனர். அப்பதிவில் ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவர் மைக்கை ஆன் செய்யாமல் பேச முடிவும் எனக் கிண்டல் செய்து வருகின்றனர்.
https://twitter.com/GSaravanakumar_/status/1597921862364717056
Archive link
https://twitter.com/vishva_tnbjp/status/1597920677319045120
Archive link
உண்மை என்ன ?
ராகுல் காந்தி மைக் ஆன் செய்யாமல் பேசியதாகப் பரவும் வீடியோ குறித்து இணையத்தில் தேடினோம். இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கடந்த நவம்பர் 27ம் தேதி வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் தலைப்பில் “இந்தூர், மத்திய பிரதேசம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த முழு வீடியோவில் 5வது நிமிடத்திற்கு மேல் வைரல் செய்யப்படும் 30 வினாடி வீடியோ இருப்பதை காண முடிகிறது. அந்த வீடியோவில் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் நடக்கும் நிகழ்வு ஒன்றைப் பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.
“பாராளுமன்றத்தில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றைப் பற்றிப் பேசும்போது எனது மைக் ஆஃப் (Off) செய்யப்படுகிறது” என்பதே அந்த நிகழ்வாகும். பாரத் ஜோடோ யாத்ராவின் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் இதனை அவர் பேசியும் செய்து காட்டியும் உள்ளார்.
ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கடந்த நவம்பர் 10ம் தேதி ஷார்ட்ஸ் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், சில தலைப்புகளைப் பாராளுமன்றத்தில் பேச எழுந்தால் இதே பாணியில் தனது மைக்கை ஆஃப் செய்து விடுவதாக, அப்போது அவர் பேசிக்கொண்டு இருந்த மைக்கை ஆஃப் செய்து பேசி காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போது மைக் ஆஃப் செய்யப்படுவது பற்றி ராகுல் காந்தி செய்து கட்டியதில் ஒரு சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து, மைக்கை ஆன் செய்யாமல் பேசுகிறார் எனப் பரப்பி வருகின்றனர்.
இதேபோன்று ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து பல்வேறு பொய் செய்தி மற்றும் வதந்திகளின் உண்மைத் தன்மை பற்றி யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன பெண்ணுடன் ராகுல் காந்தி நடை பயணமா?
மேலும் படிக்க : ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாகிஸ்தான் கொடி என வலதுசாரிகள் பரப்பும் வதந்தி !
முடிவு :
நம் தேடலில், ராகுல் காந்தி மைக் ஆன் செய்யாமல் பேசியதாக பாஜகவின் நிர்மல் குமார் முதற்கொண்டு பலரும் பரப்பும் வீடியோ உண்மையல்ல.
பாராளுமன்றத்தில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி குறித்துப் பேசினால் மைக்கை ஆஃப் செய்து விடுகிறார்கள் என அவர் செய்து காட்டியதை எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.