YouTurn

ராகுல் காந்தி தலையில் ஸ்னைபர் குறியா ?

ராகுல் காந்தி தலையில் ஸ்னைபர் குறியா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஏப்ரல் 11 -ம் தேதி பல மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல்கள் நடைபெற துவங்கி உள்ளன. இதற்கு முன்பாக அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பச்சை நிறத்தில் லேசர் லைட் ஒன்று அவர் முகத்தில் 7 முறை அடிக்கப்பட்டதாகவும்...

பரவிய செய்தி

இன்றைய ராகுல் செய்தியாளர் சந்திப்பில் அவரி ஸ்னைபர் துப்பாக்கி மூலம் தாக்க சதி என்று கூறி தேர்தல் நாளான இன்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. காங்கிரஸ் கட்சி ராகுல் உயிர்க்கு ஆபத்து என கடிதம் கொடுத்ததாக கூறியுள்ளது. ஆனால், கடிதம் ஏதும் கிடைக்கவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விரிவான விளக்கம்

ஏப்ரல்  11 -ம் தேதி பல மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல்கள் நடைபெற துவங்கி உள்ளன. இதற்கு முன்பாக அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பச்சை நிறத்தில் லேசர் லைட் ஒன்று அவர் முகத்தில் 7 முறை அடிக்கப்பட்டதாகவும், ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றச்சாட்டு எழுந்ததாக செய்திகள் வெளியாகின.



மேலும், இது தொடர்பாக மத்திய உள்துறை  அமைச்சகத்துக்கு பாதுகாப்பு குறைபாடு குறித்து காங்கிரஸ் கடிதம் எழுதியதாகவும், அதில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொலைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளதாக செய்திகளில் வெளியாகின.

இச்செய்திகளை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு பாதுகாப்பு குழுவிற்கு விசாரணை நடத்த உத்தரவிட்டது. வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு சிறப்பு பாதுகாப்பு குழு நடத்திய விசாரணையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதுமில்லை என கூறினர்.

மேலும், ராகுல் காந்தியின் மீது விழுந்த பச்சை நிற ஒளியானது  ராகுலின் உரையை வீடியோ எடுத்த   அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புகைப்படக் கலைஞரின் செல்போன் கேமராவில் இருந்து வந்ததாக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.


இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எந்தவொரு கடிதமும் வரவில்லை என மத்திய அமைச்சகம் மறுத்துள்ளது. இதேபோன்று, செய்திகளில் வெளியாகியது போன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சகத்துக்கு எந்தவொரு கடிதமும் அனுப்பவில்லை என காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் அளித்த கடிதம் என பரவுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான அஹ்மத் படேல், ஜெயராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜீவாலா ஆகியோர் கையெழுத்திடப்படுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி இதனை மறுக்கிறது. அப்படி ஒரு எந்த கடிதமும் தங்கள் தரப்பில் இருந்து அனுப்பவில்லை என்கிறது.

சுருக்கமாக

ராகுல் காந்தி மீது விழுந்த லேசர் லைட் போன்ற ஒளி புகைப்படக் கலைஞர் ஒருவரின் கேமராவில் இருந்து விழுந்ததாக சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர். எனினும், காங்கிரஸ் கட்சியின் சார்ப்பில் இச்செய்தி தொடர்பாக எந்தவொரு கடிதமும் அனுப்பவில்லை என காங்கிரஸ் கட்சியே மறுப்பு தெரிவித்து உள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.