YouTurn

சர்வதேச ரேடியோ ஒலிபரப்பு செய்யும் Radio garden: ISROவின் சாதனையா ?

சர்வதேச ரேடியோ ஒலிபரப்பு செய்யும் Radio garden: ISROவின் சாதனையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

வாட்ஸ் ஆஃப் செயலில் “ ISRO வின் புதிய சாதனை “ எனக் கூறி ஓர் செய்தி வைரலாகி வருவதை காணலாம். இதில் உலகில் எப்பகுதியில் உள்ள ரேடியோ ஸ்டேஷனின் நேரடி ஒலிபரப்பை கேட்க இயலும். இந்த சாதனையை செய்தISRO வை பாராட்ட வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், இச்செய்தி 2017 மே மாதத்திலே இஸ்ரோவின் பெயரைக் கூறி வலம் வரத்...

பரவிய செய்தி

நமது ISRO வின் புதிய சாதனை நாம் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால் உலக உருண்டை சுழலும் அதில் பச்சை நிற புள்ளி இருக்கும் அதில் நீங்கள் விரும்பும் இடத்தை தொட்டால் live radio without earphone ல் கேட்க முடியும். http://radio.garden/live Simply amazing!! Proud of ISRO….

விரிவான விளக்கம்

வாட்ஸ் ஆஃப் செயலில் “ ISRO வின் புதிய சாதனை “ எனக் கூறி ஓர் செய்தி வைரலாகி வருவதை காணலாம். இதில் உலகில் எப்பகுதியில் உள்ள ரேடியோ ஸ்டேஷனின் நேரடி ஒலிபரப்பை கேட்க இயலும். இந்த சாதனையை செய்தISRO வை பாராட்ட வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், இச்செய்தி 2017 மே மாதத்திலே இஸ்ரோவின் பெயரைக் கூறி வலம் வரத் துவங்கியது.



Radio Garden :

குறுந்தகவலில் வழங்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து உள் நுழைகையில் Radio Garden என வருவதை காணலாம். அதில் பூமி சுழல்வதில் நீங்கள் விருப்பப்பட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அங்குள்ள ரேடியோ ஒலிபரப்பை நேரடியாக கேட்க இயலும்.

கையடக்க செல்போன், தொலைக்காட்சி பெட்டி என தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் சிலருக்கு ரேடியோ கேட்கும் வழக்கம் உள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் அதிகளவில் அரசியல் பேச்சுகள் மற்றும் புரளிகள் பரவுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஆகையால், மக்களுக்கு இடையேயான கோபம் மட்டுமே மூழ்கிறது. இதை கட்டுப்படுத்த உலகின் எப்பகுதியில் இருந்தும் ஒலிபரப்பு செய்யப்படும் இசையை கேட்க இந்த Radio Garden உதவுகிறது.



Radio Garden அம்ஸ்டேர்டம் சார்ந்த டிசைன் நிறுவனங்களான Studio puckey மற்றும் Moniker மூலம் உருவாக்கப்பட்டது. நெதர்லாந்து இன்ஸ்ட்டிடியூசன் ஃபார் சௌண்ட அண்ட் விஷன் என்ற நிறுவனத்தால் அணுகப்பட்டது. இது ரேடியோ பற்றிய ஒரு ஆராய்ச்சி திட்டத்திற்காக நிறுவலை உருவாக்கியது. இது வானொலி மற்றும் தொலைதூர தடைகளை கடந்து செல்லும் ரேடியோவில் கவனம் செலுத்துகிறது.

Radio Garden-ல் உலகில் உள்ள 8000க்கும் மேற்பட்ட ரேடியோ ஸ்டேஷன் இணைக்கப்பட்டு ஒலிபரப்பு செய்யப்படுகிறது. மக்கள் தங்களது விருப்பமான ஸ்டேஷனை தேர்ந்தெடுத்து கேட்கலாம். இந்திய ரேடியோ ஸ்டேஷன் கூட இதில் இணைக்கப்பட்டுள்ளன. இசையை விரும்பும் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சாதாரண ரேடியோ கேட்கும் பொழுது அதற்கு Ear phone இணைக்கப்பட்டு கேட்குமாறு இருக்கும். ஆனால், இது ஆன்லைன் மூலம் கேட்பதால் Ear phone இன்றி கேட்கும்படி அமைத்துள்ளனர். Radio Garden-ஐ ISRO உருவாக்கி சாதனை புரிந்து உள்ளது என்பது வீண் வதந்தியே..

ரேடியோ லைவ் முயற்சி செய்து பார்க்க க்ளிக் செய்யவும்

சுருக்கமாக

Radio Garden என்னும் ரேடியோ இணையதளத்தில் சென்று உலகின் எந்தவொரு பகுதியில் உள்ள ரேடியோ ஸ்டேஷனின் நேரடி ஒலிபரப்பை கேட்க இயலும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க