YouTurn

ரஷ்ய அதிபர் புதின் நேரில் சென்று இந்திய மாணவர்களை வழி அனுப்பியதாக வதந்தி !

ரஷ்ய அதிபர் புதின் நேரில் சென்று இந்திய மாணவர்களை வழி அனுப்பியதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ரஷ்ய அதிபர் புதின் அவர்கள் நமது இந்திய மாணவர்களை அழைத்து வரும் விமானத்தில் ஏறி அவர்கள் பத்திரமாக செல்கிறார்களா என்று அக்கறையுடன் விசாரிக்கும் காணொளி.



facebook link 

விரிவான விளக்கம்

உக்ரைன் போர் சூழலில் இந்திய மாணவர்கள் விமானத்தில் புறப்பட தயாராக இருக்கும் போது, ரஷ்ய அதிபர் புதின் நேரில் சென்று இந்திய மாணவர்களை விசாரித்து வழி அனுப்பி வைத்ததாக விமானத்தில் எடுக்கப்பட்ட 2 நிமிட வீடியோ ஒன்று பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.



 



உண்மை என்ன ? 

வைரலாகும் வீடியோவில் ET NOW எனும் செய்தி நிறுவனத்தின் லோகோ இடம்பெற்று இருக்கிறது. அந்த சேனலில் வீடியோ குறித்து தேடுகையில், " விமான பயணத்திற்கு முன்பாக ரோமானியா நாட்டிற்கான இந்திய தூதர் ராகுல் ஸ்ரீவஸ்தவா இந்தியர்களுடன் பேசுவதாக " பிப்ரவரி 26-ம் தேதி இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது.



Twitter link  

மேலும், பிப்ரவரி 26-ம் தேதி இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் யூடியூப் சேனலில், " ரோமானியா நாட்டிற்கான இந்திய தூதர் ராகுல் ஸ்ரீவஸ்தவா இந்தியர்களுடன் கலந்துரையாடினார் " எனும் தலைப்பில் வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது



மேலும் படிக்க : ரஷ்யா-உக்ரைன் போரை 6 மணி நேரம் இந்தியா நிறுத்தியதாக வதந்தி!

இதற்கு முன்பாக, ரஷ்யா-உக்ரைன் போரை 6 மணி நேரத்திற்கு இந்தியா நிறுத்தி வைத்ததாக வதந்தி ஒன்று இந்திய அளவில் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
முடிவு : 


நம் தேடலில்,  ரஷ்ய அதிபர் புதின் விமானத்தில் செல்லும் இந்திய மாணவர்களை நேரில் சென்று வழி அனுப்பி வைத்ததாக பரவும் வீடியோ தவறானது. அந்த வீடியோவில் இருப்பது இந்திய தூதர் ராகுல் ஸ்ரீவஸ்தவா என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க