YouTurn

பஞ்சாபில் மொத்த பாஜக எம்எல்ஏகளும் காங்கிரஸில் இணைந்ததாக வதந்தி !

பஞ்சாபில் மொத்த பாஜக எம்எல்ஏகளும் காங்கிரஸில் இணைந்ததாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பஞ்சாபில் மொத்த பிஜேபி MLA-களும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இப்போது பிஜேபி இல்லாத பஞ்சாப்.



Archive link

விரிவான விளக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 3 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாகவும், தற்போது பாஜக இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாறியதாக ஓர் தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதை பார்க்க முடிந்தது.

உண்மை என்ன ?

பஞ்சாப் மாநிலத்தின் மொத்த பாஜக எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது செய்தியோ வெளியாகவில்லை. மேலும், பஞ்சாபில் 3 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறும் தகவல் தவறானது. தற்போது பஞ்சாபில் அருண் நராங் மற்றும் தினேஷ் சிங் என 2 பாஜக எம்எல்ஏக்களே உள்ளனர். இவ்விருவரும் கட்சி மாறவில்லை.



" நான் பஞ்சாபில் பாஜக சார்பில் மூன்று முறை எம்எல்ஏவாகி இருக்கிறேன். தற்போதும் என் கட்சியிலேயே இருக்கிறேன். நான் காங்கிரசில் இணைந்ததாக பரவும் தகவல் தவறானது " என சுஜான்பூர் பாஜக எம்எல்ஏ தினேஷ் சிங் இந்தியா டுடேவிற்கு பதில் அளித்து இருக்கிறார்.

பஞ்சாப் பாஜக எம்எல்ஏக்கள் அருண் நராங் மற்றும் தினேஷ் சிங் ஆகிய இருவருமே சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவலை மறுத்துள்ளனர். ஆனால், இந்தியா அளவில் பஞ்சாப் பாஜக எம்எல்ஏக்கள் மொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாகவும், பாஜக இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாறியதாகவும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க