YouTurn

தெலுங்கு புத்தாண்டிற்கு தமிழ்நாட்டில் இந்தாண்டு தான் புதிதாக விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறதா?

தெலுங்கு புத்தாண்டிற்கு தமிழ்நாட்டில் இந்தாண்டு தான் புதிதாக விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

தெலுங்கு புத்தாண்டிற்கு தமிழ்நாட்டில் பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான்.

பரவிய செய்தி

தெலுங்கு வருடப்பிறப்புக்கு எதுக்கு தமிழ்நாட்டில் லீவு??


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வரவிருக்கின்றன புதிய ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடும். அந்த வகையில் 2026ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்களின் பட்டியல் மாநில அரசின் உள்துறைத் துறை சார்பில் நவம்பர் 11ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.


அதில், மார்ச் 19ஆம் நாள் தெலுங்கு புத்தாண்டு தினத்திற்காக பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, ’தெலுங்கு வருட பிறப்பிற்கு தமிழ்நாட்டில் ஏன் புதிதாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது’ என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?


‘தெலுங்கு புத்தாண்டு தினத்திற்கு’ இதற்கு முந்தைய ஆண்டுகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறதா? என்பது குறித்து தேடினோம். கடந்த 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை குறித்து தமிழ்நாடு அரசு 11/10/2022 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணமுடிந்தது. அதில், 22/03/2023 அன்று ‘தெலுங்கு புத்தாண்டு தினத்திற்கு’ பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.



இதேபோல், அதிமுக ஆட்சியில் இருந்தபோது வெளியிடப்பட்ட பொது விடுமுறை அறிவிப்புகளையும் தேடினோம். கடந்த 2020ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை குறித்து தமிழ்நாடு அரசு 22/10/2019 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 25/03/2020 அன்று ‘தெலுங்கு புத்தாண்டு தினத்திற்கு’ பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.



இதேபோல், கடந்த 2021ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை குறித்து தமிழ்நாடு அரசு 27/10/2020 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 13/04/2021 அன்று ‘தெலுங்கு புத்தாண்டு தினத்திற்கு’ பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். 



இதிலிருந்து, தெலுங்கு புத்தாண்டிற்கு தமிழ்நாட்டில் பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்பது தெளிவாக தெரிகிறது.


முடிவு:


தெலுங்கு  புத்தாண்டிற்கு தமிழ்நாட்டில் இந்தாண்டுதான் புதிதாக விடுமுறை அளிக்கப்படுள்ளதாக தவறாக பரப்பி வருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.