
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
18 மாதங்களுக்கு முன் எனது தொழில் முறை வாழ்க்கையை விட்டு விட்டு,பொது வாழ்க்கைக்கு வந்தது தவறோ என்று எண்ண தோன்றுகிறது - ஒத்த செருப்பு.
இப்படியா கதற விடுவது...😂
ஒரே ஒரு தட்டு தட்டுனதுக்கு பால்வாடி பய மாதிரி இந்த அழுவாச்சியா?
தாக்கு பிடிக்க முடியலையா?டக்லஸ்.
இன்று போய் நாளை வா!😂 pic.twitter.com/cUntcf5ddk
— பாரதி கண்ணம்மா,🚩जय श्री राम🚩🚩🚩🚩 (@vanamadevi) September 1, 2022
Archive link
இந்நிலையில், அண்ணாமலைக்குப் பயந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் அரசியல் வாழ்விற்கு வந்தது தவறான முடிவு எனத் தெரிவித்ததாக ட்விட் ஒன்றை தற்போது பாஜகவினர் வைரலாக்கி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பிடிஆர் பதிவிட்டதாக பரவும் ட்விட்டில் 2022 செப் 1ம் தேதி என இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தேடியபோது சமீபத்தில் பிடிஆர் அப்படி ஒரு ட்விட் பதிவிடவில்லை. அது கடந்த 2017 ஆண்டு பதிவிட்ட பதிவு.
I am ashamed to be a "Politician" - even in opposition, when the blood of #Anitha is clearly on the hands of politicians in Govt. Office 2/
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) September 1, 2017
Twitter link | Archive link
எதற்காக அப்படி ஒரு ட்விட்டை பதிவிட்டு இருந்தார் என்றால், தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வால்அரியலூர் மாணவி அனிதா இறந்த அன்று இவ்வாறு ட்விட் செய்து இருந்தார். இந்த ட்விட்டை தொடர்ந்து நீட் தேர்வும், அதனுடன் தொடர்புடைய தகுதி தேர்வுகள் அனைத்து விதமான தேர்வுகளும் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதாக இல்லை எனத் தெரிவித்து இருந்தார்.
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் தனது டிவிட்டரில் நீட் தேர்வைக் குறித்து பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த பிடிஆர் தான் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை என்றும், அதனால் அரியலூர் மாணவி அனிதா இறந்த சம்பவத்தை ஒரு பெற்றோராக என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், அனிதாவின் பெற்றோரின் வலியை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை எனக் கருத்து தெரிவித்து இருந்தார்.

2௦17ல் எழுதிய ட்விட்டுகளில் உள்ள முன் பகுதியை மட்டும் எடுத்து அதை தற்போது பதிவிட்ட ட்விட் போன்று வருடத்தை மாற்றி அண்ணாமலைக்காக பதிவிட்டதாக தவறாக வைரலாக்கி வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்குப் பயந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அரசியல் வாழ்க்கையை விட்டு செல்வதாக கூறப்படும் செய்தி தவறானது. பிடிஆர் சமீபத்தில் அதுபோன்று ட்விட் ஏதும் செய்யவில்லை.
கடந்த 2017 ஆண்டில் அரியலூர் மாணவி அனிதா இறப்பை ஒட்டி பிடிஆர் பதிவிட்ட ட்வீட் பதிவில் வருடத்தை மாற்றி அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு செல்வதாக பதிவிட்டு உள்ளார் என பாஜகவினர் வதந்தியைப் பரப்பி வருகின்றனர் என அறிய முடிகிறது.