YouTurn

அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா ?

அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்களா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அடித்து நொறுக்கியதாக கீழ்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்டாக் வீடியோவின் பின்னணியில் தமிழில் ஒருவர் பேசியும் இருக்கிறார். Facebook link | archive link உண்மை என்ன ? அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் போலீஸ்...

பரவிய செய்தி

உலக வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் புகுந்து மக்கள் போராட்டம்..



Facebook link | archive link  

விரிவான விளக்கம்

அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அடித்து நொறுக்கியதாக கீழ்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்டாக் வீடியோவின் பின்னணியில் தமிழில் ஒருவர் பேசியும் இருக்கிறார்.



Facebook link | archive link 

உண்மை என்ன ? 

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதன் காரணமாக நிறவெறிக்கு எதிராக நாடு முழுவதிலும் போராட்டங்கள் வெடித்தன. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நடுவிலும் நிறவெறிக்கு எதிராக போராட்டங்கள் எழுச்சி பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்டது.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே போராட்டக்காரர்கள் குவிந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. காவல் அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது, போராட்டக்காரர்கள் கற்களை வீசுவது அரங்கேறியது. அமைதியான போராட்டங்களிலும் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்ததாக எங்கும் வெளியாகவில்லை. சாலையில் நடைபெறும் போராட்டங்களை கட்டுப்படுத்த ராணுவம் அனுப்பப்படும் என ட்ரம்ப் அறிவித்தார்.

எனினும், போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அடித்து நொறுக்கியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகை அல்ல.



வைரல் வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து Yandex தளத்தில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஓஹியோ கேப்பிட்டல் பில்டிங் என தரமான புகைப்படங்களை காண்பித்தன. வைரலாகும் வீடியோவில் இருப்பது போன்ற முகப்பு, பின்பக்க கட்டிட அமைப்பு அனைத்தும் ஒன்றாக இருப்பதை காணலாம்.



ஓஹியோ ஸ்டேட் ஹவுஸ் கட்டிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தேடிய பொழுது,  போராட்டக்காரர்கள் ஓஹியோ ஸ்டேட் ஹவுஸ் கட்டிடத்தின் கண்ணாடிகளை உடைத்ததாக கீழ்காணும் வீடியோ யூடியூப் சேனல் ஒன்றில் மே 29-ம் தேதி வெளியாகி இருக்கிறது.



முடிவு : 

நம் தேடலில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததாக பரப்பப்படும் வீடியோ தவறானது. வைரலாகும் வீடியோ வெள்ளை மாளிகை அல்ல, ஓஹியோ ஸ்டேட் ஹவுஸ் என அறிந்து கொள்ள முடிகிறது .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க