YouTurn

மோடியை பிரதமராக்க வேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கோசமிட்டதாக வதந்தி !

மோடியை பிரதமராக்க வேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கோசமிட்டதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


மோடிஜியை பாகிஸ்தான் பிரதமராக அறிவிக்க வேண்டும். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்



எம்.பி.க்கள் பரிந்துரைத்ததால், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி மோடி' என்ற கோசங்கள் பலமாக எழுப்பப்பட்டது.




Facebook link 

விரிவான விளக்கம்

ரஷ்யா-உக்ரைன் போர் சூழ்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் பிரதமராக்க வேண்டும் என பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பரிந்துரையின் போது எம்பிக்கள் "மோடி மோடி " என கோசமிட்டதாக 2 நிமிட வீடியோ ஒன்று இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.






Twitter link | Archive link

மார்ச் 4-ம் தேதி பஞ்சாப் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இவ்வீடியோ வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ?  



2020 அக்டோபர் மாதம் தமிழ்நாடு பாஜக இளைஞரணியின் முகநூல் பக்கத்தில், " பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி...மோடி...மோடி... " என கோசமிட்டதாக இதே வீடியோவை பதிவிட்டு இருக்கிறனர். ஆனால், இதுவும் உண்மை அல்ல.

மேலும் படிக்க : பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் “மோடி மோடி” எனும் முழக்கம் எழுப்பப்பட்டதா ?

2020-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி மோடி என கோசமிட்டதாக பரவி வரும் வீடியோ, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக வாக்கு எடுக்க வேண்டும் என ” Voting Voting ” என கோசமிட்டு உள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி மோடி என முழங்கியதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல் என நாம் விரிவான கட்டுரையை வெளியிட்டு இருக்கிறோம்.



2020 அக்டோபர் 26-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒளிபரப்பு செய்த Public news சேனல் வீடியோவில் 13.30வது நிமிடத்தில் இருந்து வைரல் வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அதில், 13.30-வது நிமிடத்தில் ” Voting Voting ” என முழங்குவதை கேட்கலாம்.

முடிவு :

நம் தேடலில், உக்ரைன் போர் சூழலில் மோடியை பாகிஸ்தான் பிரதமராக அறிவிக்க வேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பரிந்துரைத்ததால், " மோடி மோடி' என்ற கோசங்கள் எழுப்பப்பட்டதாக பரவும் தகவல் மற்றும் வீடியோ பொய்யானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க