யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அரபு நாட்டைச் சேர்ந்த பிரின்சஸ் ஷேய்க்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸ்மி என்கிற பெயரை சமீபத்தில் நாம் அறிந்து இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் இஸ்லாமோபோஃபியா அதிகரித்து வருவதாக ட்விட்டரில் தொடர் கருத்துக்களை வெளியிட்டு வந்த ஷேய்க்கா ஹெண்ட் இந்தியா அளவில் நன்கு அறியப்பட்டார். இது தொடர்பாக இந்திய...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
அரபு நாட்டைச் சேர்ந்த பிரின்சஸ் ஷேய்க்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸ்மி என்கிற பெயரை சமீபத்தில் நாம் அறிந்து இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் இஸ்லாமோபோஃபியா அதிகரித்து வருவதாக ட்விட்டரில் தொடர் கருத்துக்களை வெளியிட்டு வந்த ஷேய்க்கா ஹெண்ட் இந்தியா அளவில் நன்கு அறியப்பட்டார். இது தொடர்பாக இந்திய ஊடகத்திலும் பேட்டி அளித்து இருந்தார்.
இந்நிலையில், " ஐக்கிய அரபு இளவரசி சுவாமி தரிசனம். வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் மற்றும் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் ஐக்கிய அரபு நாடுகளின் இளவரசி ஹெண்ட் பைசல் அல் குவாஸ்மி ஸ்ரீலட்சுமி நாராயணியை தரிசனம் செய்து , ஸ்ரீசுவர்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார் " தமிழ் செய்தித்தாளில் வெளியான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த செய்தித்தாள் பக்கத்தில் இடம்பெற்ற செய்தி உண்மையா என ஆராய்ந்து கூறுமாறு யூடர்ன் முகநூல் பக்கம் ஃபாலோயர்கள் தரப்பில் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. ஆகையால், புகைப்படம் குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?

2019 பிப்ரவரி 22-ம் தேதி தி ஹிந்து செய்தியில், " பிப்ரவரி 22-ம் தேதி ஆம்பூரில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்கிற நிகழ்ச்சியை அனைக்கர் கல்வி குழுமம் என்கிற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சார்ஜாவின் இளவரசி ஷேய்க்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸ்மி கலந்து கொண்டதாக " வெளியாகி இருக்கிறது.
ஷேய்க்கா ஹெண்ட் வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் கோவிலுக்கு வருகை தந்தாரா எனத் தேடுகையில் " sripuram tv " எனும் யூடியூப் சேனலில் ஷேய்க்கா ஹெண்ட் பிப்ரவரி 22-ம் தேதி கோவிலுக்கு வருகை தந்த போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.
Youtube link | archive link

வீடியோவில் 0.58-வது வினாடியில் அவர் ஸ்ரீசுவர்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்யும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. ஷேய்க்கா ஹெண்ட் ஒரு பெண் தொழிலதிபரும் என்பதால் கடந்த ஆண்டு ஆம்பூரில் நடைபெற்ற பெண்களுக்கான அதிகாரமளித்தல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த சமயத்தில் வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து உள்ளார். அப்போழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.