யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜூன் 7-ம் தேதி நாக்பூரில் உள்ள Hedgewar Residence-ல் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அருகில் இருக்கும்...
பரவிய செய்தி
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் பாணியில் வணங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன.
விரிவான விளக்கம்
ஜூன் 7-ம் தேதி நாக்பூரில் உள்ள Hedgewar Residence-ல் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அருகில் இருக்கும் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் பாணியில் நெஞ்சில் கை வைத்து வணங்குவது போன்றும், அவரின் தலையில் மோகன் பகவத் அணிந்தது போன்ற கருப்பு நிற தொப்பியை அணிந்தது போன்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி உள்ளனர். இவ்வாறு, ஒரு காங்கிரஸ் தலைவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சல்யூட் செய்துள்ளார் என்று போட்டோஷாப் மூலம் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஸ்தா முகர்ஜி, பிரணாப் முகர்ஜி எந்தவொரு கருப்பு தொப்பியையும் அணியவில்லை, சல்யூட் செய்யவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் மகள் மற்றும் காங்கிரஸ் தலைவரான ஷர்மிஸ்தா முகர்ஜி இந்த புகைப்படங்கள் குறித்து தனது ட்விட்டரில் கூறியதாவது, “ பாருங்கள், எதை நினைத்து பயந்தேனோ என் தந்தையை எச்சரிக்கை செய்தேனோ அதே நடந்துள்ளது. சில மணி நேரங்களிலேயே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி உடைய கேவலமான சூழ்ச்சியின் ஆழத்தை இந்த வேளையில் முழு வீச்சில் இருப்பதை காணலாம் ” என்று ஜூன் 7-ம் தேதி பதிவு செய்து இருந்தார்.
இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முந்தைய நாளே ஷர்மிஸ்தா முகர்ஜி தனது ட்விட்டரில், தனது தந்தைக்கு எச்சரிக்கை செய்தது மட்டுமல்லாமல், "அவரின் பேச்சு மறுக்கப்படும். ஆனால், அவரது காட்சி தவறான தகவலுடன் சுற்றி வரும்" என்று பதிவிட்டு இருந்தார். அவரின் பதிவு போன்றே நடந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணப் முகர்ஜி பேசியதாவது, " மதம், பிராந்தியம், வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் தேசியத்தை வரையறுக்கும் எந்தவொரு முயற்சியும் நமது தேசிய அடையாளத்தை விளக்குகிறது.
இந்தியாவின் ஆன்மா பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையில் வாழ்கிறது. மதச்சார்பின்மை மற்றும் உட்பிரிவு நமக்கு நம்பிக்கைக்குரிய விஷயம். இந்தியாவின் தேசியத்துவத்திற்கு ஒரு மொழி ஒரு மதம் எதிரி அல்ல. 122-க்கும் மேற்பட்ட மொழிகளிலும், 1600 வட்டாரங்களிலும் அன்றாட வாழ்க்கையைப் பயன்படுத்தும் 1.3 பில்லியன் மக்கள் மட்டுமின்றி உலகளாவியதாகும். 7 பிரதான மதங்கள் நடைமுறையில் உள்ளன. ஒரே ஒரு அமைப்பு, ஒரு கொடி மற்றும் பாரதத்திற்கு ஒரு அடையாளம், எதிரிகள் என ஏதும் இல்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இறுதியில், பிரணாப் முகர்ஜியின் வார்த்தைகள் மறைக்கப்பட்டு, அவரின் படத்தை மட்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போன்று தவறாக மார்ஃபிங் செய்து வெளியிட்டது சிலரின் தரக்குறைவான எண்ணத்தை பிரதிப்பலிக்கின்றது.

சுருக்கமாக
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் இந்திய குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை தவறாக மார்ஃபிங் செய்து வெளியிட்ட புகைப்படத்திற்கு பிரணாப் முகர்ஜியின் மகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.