YouTurn

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இறந்து விட்டதாக வதந்தி!

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இறந்து விட்டதாக வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சற்றுமுன் ஆழ்ந்த இரங்கல்.. முன்னாள் இந்திய குடியாரசுதலைவர் பிரணாப்முகர்ஜி அவர்கள் காலமானார்.. வீர வணக்கம்.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

ஆகஸ்ட் 10-ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு மூளையில் இருக்கும் இரத்த கட்டிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வெண்டிலேட்டர் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கொரோனாவிற்காகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பிரணாப் முகர்ஜி உடல் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது அவர் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.





இந்நிலையில், " என் தந்தை உயிருடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் " என பிரணாப் முகர்ஜியின் மகனும் , காங்கிரஸ் தலைவருமான அபிஜித் முகர்ஜி ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.



Twitter link | archive link 

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாகவும், சுயநினைவின்றி உள்ள அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க