YouTurn

போப்பை பல்லக்கில் தூக்கிச் செல்வதாக வைரலாகும் 50 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்கள் !

போப்பை பல்லக்கில் தூக்கிச் செல்வதாக வைரலாகும் 50 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுர ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதாசத்தை பல்லக்கில் தூக்கும் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை வருவாய் கோட்டாச்சியர் பாலாஜி தடைவிதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதற்கு, மதுரை ஆதீனம், மன்னார்குடி ஜீயர் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆளும் அரசிற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, ஆதீனங்களுடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருந்தார்.

தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தில் மனிதரை மனிதரே தூக்கும் நிலை மாற வேண்டும் என தி.க அமைப்பு உள்ளிட்டோர் தெரிவித்து வருகையில், வாடிகன் நகரில் கிறிஸ்தவ மத போதகர் போப் ஆண்டவரை பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்வதாகவும், இது பிற்போக்குத்தனத்தில் சேராதா என பாஜகவினர் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் இப்புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.



Twitter link 



உண்மை என்ன ? 

போப் ஆண்டவரை பலக்கில் தூக்கிச் செல்வதாக பரப்பப்படும் புகைப்படங்கள், 1963 முதல் 1978 வரை போப் ஆண்டவராக இருந்த ஜான் பால் VI " செடியா கெஸ்டடோரியா " என்ற சடங்கின் போது சிம்மாசன இருக்கை கொண்ட பல்லக்கில் ஊர்வமாக கொண்டு செல்லப்பட்ட போது எடுக்கப்பட்டவை.





இந்த நடைமுறைக்கு போப் மத்தியில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், 1978-ல் போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜான் பால் II வந்த பிறகே இந்த பாரம்பரிய முறை முழுமையாக அகற்றியதாக தி வாஷிங்டன் போஸ்ட் 2015-ல் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறது.



இதன்பிறகு, சிம்மாசன இருக்கை கொண்ட பல்லக்கிற்கு பதிலாக போப் ஜான் பால் II " popemobile " எனும் வாகனத்தை பயன்படுத்த துவங்கினார். அதன் பின்னர் வந்தவர்களும், வாகனத்தையே பயன்படுத்தி வருகிறார்கள்.



முடிவு : 

நம் தேடலில், தருமபுர ஆதீன விவாகரத்தில் போப் ஆண்டவரை பல்லக்கில் தூக்கிச் செல்வதாக பகிரப்படும் புகைப்படங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பாக எடுத்த பழைய புகைப்படங்கள். போப் ஆண்டவரை இருக்கை கொண்ட பல்லக்கில் தூக்கிச் செல்லும் நடைமுறை 1978-ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, வாகனத்தில் செல்லும் நடைமுறையில் இருப்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க