YouTurn

போப் பிரான்சிஸின் எளிமையான படுக்கையறை எனப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !

போப் பிரான்சிஸின் எளிமையான படுக்கையறை எனப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

140 கோடி கத்தோலிக்கரை வழிநடத்தும் திருத்தந்தையின் அறை.

Facebook link 

விரிவான விளக்கம்

கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்க பிரிவின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். 140 கோடி கத்தோலிக்கரை வழிநடத்தும் இவர், ஓர் எளிய அறையில் வசிப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.



Facebook link 



உண்மை என்ன ?

போப் பிரான்சிஸின் அறை எனப் பரப்பப்படும் புகைப்படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடுகையில், 'Aleteia' எனும் இணையதளத்தில் அப்புகைப்படம் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பதிவிடப்பட்டுள்ளது.



Archive link 

பியோவின் அறையை போப் பிரான்சிஸ் பார்வையிட்டார் எனத் தலைப்பிட்ட அப்பதிவில், 2018ம் ஆண்டு, மார்ச் மாதம் 17ம் தேதி போப் பிரான்சிஸ் சான் ஜியோவானி ரோடோண்டோ பகுதியில் உள்ள புனிதர் பியோவின் அறையைப் பார்வையிட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்புகைப்படத்தை வாடிகன் பத்திரிக்கையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 



மேற்கொண்டு தேடியதில் 2022, ஜூலை 26ம் தேதி, இதே புகைப்படம் ‘Padre Pio Devotions’ என்னும் பேஸ்புக் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. அதில், பியோ 52 ஆண்டுகள் வாழ்ந்த அறைக்கு போப் பிரான்சிஸ் வருகை தந்தார் என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போப்பின் அறை குறித்துத் தேடியதில், 2013ம் ஆண்டு வெளியான சில செய்திகள் கிடைத்தது. பிபிசி-யில் வெளியான செய்தியில், வாடிகன் அப்போஸ்தலிக் அரண்மனையின் மேல் தளத்தில் போப்பிற்காக உள்ள பிரம்மாண்ட குடியிருப்பைத் தவிர்த்துவிட்டு, இரண்டு அறைகள் உள்ள வீட்டில் குடியிருக்க போப் பிரான்சிஸ் முடிவு செய்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.



Archive link 

மேலும் அவர் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ முயல்கிறார் என அவரது செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதன் மூலம் பல ஆண்டுகளாகப் பின்பற்றிவந்த முறையை போப் பிரான்சிஸ் மாற்றியுள்ளார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து 'ABC நியூஸ்' என்னும் யூடியூப் பக்கத்திலும் செய்தி பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், பரவக்கூடிய புகைப்படத்திற்கும் அவர் குடியேறியதாகச் சொல்லப்பட்டும் வீடும் ஒன்றல்ல.

மேலும் படிக்க : போப் பிரான்சிஸ் இளம் பெண்களுடன் குளித்ததாகத் தவறாகப் பரப்பப்படும் AI புகைப்படம் !

இதற்கு முன்னதாக போப் இளம் பெண்களுடன் குளித்ததாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டன. அது AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது என்ற உண்மையினை யூடர்ன் கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், போப் பிரான்சிஸ் எளிமையாக வசிக்கும் வீடு எனப் பரப்பப்படும் புகைப்படம் உண்மை அல்ல. அது 2018ம் ஆண்டு புனிதர் பியோவின் அறையை போப் பிரான்சிஸ் பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படம் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க