YouTurn

கூலி தொழிலாளியின் மகன் NEET தேர்வில் தேர்ச்சிப் பெற்றாரா ?

கூலி தொழிலாளியின் மகன் NEET தேர்வில் தேர்ச்சிப் பெற்றாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2017 ஆம் ஆண்டில் இருந்து மருத்துவப் படிப்பிற்கு NEET என்ற நுழைவுத் தேர்வானது கட்டாயமாக்கப்பட்டது. இந்த NEET தேர்வு முறையால் மாநில கல்வி முறையில் பயின்ற மாணவர்கள், குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கபடுவதாக பலர் கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில், NEET தேர்வில் அரசு பள்ளியில்...

பரவிய செய்தி

அரசு பள்ளியில் படித்த கூலி தொழிலாளியின் மகன் NEET தேர்வில் தேர்ச்சிப் பெற்று மருத்துவம் படிக்கப் போகிறார். NEET ஏழை மாணவர்களுக்கான ஒன்று.

விரிவான விளக்கம்

2017 ஆம் ஆண்டில் இருந்து மருத்துவப் படிப்பிற்கு NEET என்ற நுழைவுத் தேர்வானது கட்டாயமாக்கப்பட்டது. இந்த NEET தேர்வு முறையால் மாநில கல்வி முறையில் பயின்ற மாணவர்கள், குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கபடுவதாக பலர் கூறி வருகின்றனர்.


இப்படி இருக்கையில், NEET தேர்வில் அரசு பள்ளியில் படித்த கூலி தொழிலாளியின் மகன் தேர்ச்சிப் பெற்று மருத்துவம் படிக்கப் போகிறார் என்றும், NEET ஆனது ஏழை மாணவர்களுக்கும் ஏற்றது என்று கூறிச் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



NEET தேர்வில் தேர்ச்சிப் பெற்றதாகக் கூறிப் பரவி வரும் படத்தில் உள்ள மாணவன் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன். ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் பயின்ற இவர் 2008 ஆண்டில் நடந்த பொதுத் தேர்வில் 1106 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாலசுப்ரமணியனின் கனவும், அவரது குடும்பத்தினரின் கனவும் பொறியியல் படிப்பில் சேர்ந்து நன்றாக படிப்பது தான். பொறியியல் கட் ஆப் 195 பெற்றதால் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தும், வறுமையின் காரணமாக தீப்பெட்டி ஒட்டும் பணியில் ஈடுப்பட்டார்.


இதையறிந்த சில நல்லுள்ளம் கொண்டவர்களின் உதவியால் பாலசுப்ரமணியனின் கல்லூரி படிப்பானது தொடர்ந்தது. இது நடந்த ஆண்டை பார்த்தால், பாலசுப்ரமணியன் தனது கல்லூரி படிப்பை முடித்து நல்ல வேலைக்கே சென்றிந்திருப்பார்.


ஆனால், சிலர் இவரது படங்களை வைத்து NEET தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் என்றுக் கூறி வதந்திகளை பரப்புகின்றனர். இந்த தேர்வானது ஏழை மாணவர்களுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்ற ஓர் மாயப் பின்பத்தை காண்பிக்கவே இதுபோன்ற வதந்திகளை பரவச் செய்கின்றனர். NEET தேர்வானது அனைருக்கும் பொதுவானது என்று கூறினாலும், இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை மாணவர்களே. இத்தேர்வில் தோல்வியடைவதால் தகர்க்கப்படுவது மாணவர்களின் கனவுகளே.

சுருக்கமாக

பல ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் படிப்பை முடித்தவரை NEET தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார் என்றுக் கூறி வதந்திகளை பரப்பியுள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க