YouTurn

பாஜகவில் இருந்து வெளியேறுவேன் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாரா ?

பாஜகவில் இருந்து வெளியேறுவேன் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

5 மற்றும் 8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வை அரசானது அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில், 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை நீக்கவில்லை என்றால் பாஜகவில் இருந்து வெளியேறுவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாக தந்தி டிவி நியூஸ் ப்ரோகிராம் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று...

பரவிய செய்தி

5-ம் மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யவில்லை என்றால் பாஜகவில் இருந்து வெளியேறுவேன் - பொன்.ராதா.



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

5 மற்றும் 8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வை அரசானது அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில், 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை நீக்கவில்லை என்றால் பாஜகவில் இருந்து வெளியேறுவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாக தந்தி டிவி நியூஸ் ப்ரோகிராம் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கான பொதுத் தேர்வை குறிப்பிட்டு முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகுவதாக எங்கும் கூறவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. பொதுத்தேர்வு முறையை எதிர்க்கக்கூடியவர்களும் அல்ல.



தந்தி டிவி செய்தியின் நியூஸ் ப்ரோகிராம் டெம்ப்ளேட்டில் போட்டோஷாப் செய்து போலியான செய்தியை கிண்டலுக்கோ அல்லது எதிராக மாற்றவோ பரப்பி இருக்கக்கூடும். மேலும், போட்டோஷாப் செய்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் என கூறாமல், பொன்.ராதா என எங்கும் குறிப்பிடாத வகையில் தவறாகவே எடிட் செய்துள்ளனர்.



இதேபோல், தந்தி டிவி செய்தியின் நியூஸ் ப்ரோகிராம் டெம்ப்ளேட்டில், " 5-ம் மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்திடுவேன் - மிரட்டும் தமிழிசை " என மற்றொரு போலிச் செய்தியை பரப்பி உள்ளனர்.

கிண்டலுக்காகவும், போலியான செய்திகளை மக்களிடம் பரப்பவே செய்தி நிறுவனங்களின் லோகோ, நியூஸ் கார்டுகள், நியூஸ் ப்ரோகிராம் டெம்ப்ளேட்டில் எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…