YouTurn

பொள்ளாச்சியில் மீண்டும் ஓர் பாலியல் வன்கொடுமை சம்பவம்| 9 பேர் கைது !

பொள்ளாச்சியில் மீண்டும் ஓர் பாலியல் வன்கொடுமை சம்பவம்| 9 பேர் கைது !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்த அதிர்ச்சி மறைவதற்குள் மீண்டும் ஓர் பாலியல் வன்கொடுமை சம்பவம் பொள்ளாச்சியில் அரங்கேறியுள்ளது.16 வயது பள்ளி மாணவி தன் பாட்டி உடன் பொள்ளாச்சியில் குமரன் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். தன் சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டதால்...

பரவிய செய்தி

பொள்ளாச்சியில் மீண்டும் கொடூரம். 16 வயது பள்ளி மாணவியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம். 9 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

விரிவான விளக்கம்

சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்த அதிர்ச்சி மறைவதற்குள் மீண்டும் ஓர் பாலியல் வன்கொடுமை சம்பவம் பொள்ளாச்சியில் அரங்கேறியுள்ளது.16 வயது பள்ளி மாணவி தன் பாட்டி உடன் பொள்ளாச்சியில் குமரன் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். தன் சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டதால் மாணவி பாட்டியிடம் வளர்த்து வந்துள்ளார்.

மாணவியும் அதே பகுதியில் வசிக்கும் அமானுல்லா எனும் 27 வயது இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இது குறித்து அமானுல்லாவின் நண்பர்களுக்கு தெரிந்த பிறகு, நண்பர்களுடன் சேர்ந்து அப்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.



இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பொள்ளாச்சி காவல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடந்தப்பட்ட விசாரணையில், பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் அமானுல்லா உடன் பகவதி, முகமது அலி, டேவிட் செந்தில், முகமது ரபீக், அருண் நேரு, சையது முகமது, இர்ஷான் முகமது, இர்ஷான் பாட்சா என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், தலைமறைவாகிய பிரபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையடுத்து, போலீஸ் விசாரணையில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த குற்றத்தை அமானுல்லா ஒப்புக் கொண்டார். பின்னர், 9 பேரின் மீதும் போஸ்கோ
சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் பிறகு அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் எத்தனை நிகழ்ந்தாலும் துணிவுடன் பாலியல் கொடுமைகள் கொடுக்கும் கொடூரர்களும் இருந்து கொண்டே உள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…