YouTurn

ஸ்டாலின் மருமகன் சபரீசன் என பரவும் தவறான புகைப்படங்கள் | பொள்ளாச்சி விவகாரம்.

ஸ்டாலின் மருமகன் சபரீசன் என பரவும் தவறான புகைப்படங்கள் | பொள்ளாச்சி விவகாரம்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு தொடர்பு இருப்பதாக ஒருவர் பெண்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் உடன் செய்தி ஒன்று வாட்ஸ் ஆஃப்களில் பரவி வருகிறது. பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சியை சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டிக் கொண்டு உள்ளனர்...

பரவிய செய்தி

திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் மன்மதலீலைகள்.

விரிவான விளக்கம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு தொடர்பு இருப்பதாக ஒருவர் பெண்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் உடன் செய்தி ஒன்று வாட்ஸ் ஆஃப்களில் பரவி வருகிறது.

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சியை சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டிக் கொண்டு உள்ளனர். பிரச்சனையை நீர்த்து போக செய்ய துவங்கிய வேலையே இவை.

ஸ்டாலின் மருமகன் என வாட்ஸ் ஆஃப்களில் பரவும் பெண்களுடன் இருப்பவர் சபரீசன் அல்ல. பொள்ளாச்சி விவகாரத்தில் சபரீசன் பெயர் அடிபட காரணம் அவர் மீது பொள்ளாச்சி ஜெயராம் தொடுத்த அவதூறு வழக்கு.



பொள்ளாச்சி விவகாரத்தில் தன் குடும்பத்தின் மீது அவதூறு பரப்புவதாக தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திமுகவின் தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது காவல்துறையிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சபரீசன் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு உள்பட பொள்ளாச்சி விவகாரத்தின் அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐக்கு மாற்ற அரசு முடிவெடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

புகைப்படங்களில் இருப்பவர் யார் ? 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் வெடித்த சில நாட்களில் இதே படங்களுடன் ஒரு எச்சரிக்கை பதிவும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால், படங்களில் இருப்பவர் யார் என தெரியாமல் இருந்து வந்தது. தற்போது, அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.



கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ளூர் காவல்படையில் தின ஊதிய அடிப்படையில் பணியாற்றி வந்த சுஜித் ஷெட்டி ஆவார். கடந்த 2018 மார்ச் 16-ம் தேதி வெளியான செய்தியில் சுஜித் ஷெட்டி 11 பெண்களுடன் தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி எதிரான கண்டனங்கள் எழுந்ததால் அவரை சஸ்பென்ட் செய்துள்ளனர்.



மேலும், துறை சார்ந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என கம்மண்டன்ட் கே. பிரகாஷ் ஷெட்டி தெரிவித்து இருந்தார். சுஜித் ஷெட்டி பெண்களுடன் இருக்கும் புகைப்படங்களுடன் மங்களூர் டுடேவில் செய்திகள் வெளியாகி உள்ளன.

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் :



இதே படத்தை பயன்படுத்தி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய பொள்ளாச்சி ஜெயராமன் மகன் என ஃபேஸ்புக்கில் தவறாக பதிவிட்டு வருகின்றனர்.

சுருக்கமாக

வாட்ஸ் ஆஃப்களில் பரவி வரும் படங்களில் இருப்பவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் அல்ல. பொள்ளாச்சி விவகாரத்தில் சபரீசன் மீதான வழக்கு என்ன ? படத்தில் இருப்பவர் யார் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.