யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
இந்துக்கள் ஓட்டு போட்டு தான் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அவசியம்யில்லை - திமுக தலைவர் ஸ்டாலின்

Archive link
பாஜகவினர் மீதான கற்பழிப்பு வழக்குகள் எங்கள் வெற்றியை பாதிக்காது - தமிழக பாஜக தலைவர் முருகன்

Archive link
தாஜ்மஹாலை விபச்சார விடுதியாக மாற்ற நினைத்தது காங்கிரஸ். ஆனால் அதை தடுத்தது பாஜக தான் - குலாம்நபி ஆசாத் காங்கிரஸ்

விரிவான விளக்கம்
2021 ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு தமிழக செய்தி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் அரசியல் பரபரப்பால் நிறைந்து இருக்கிறது. இதற்கிடையில், அரசியல் கட்சிகளுக்கு எதிராக பரப்பப்படும் தவறான தகவல்கள், வெறுப்பு பேச்சுக்கள், போலிச் செய்திகள், வதந்திகள் ஆகியவை அதிகரித்து உள்ளது.
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற பிரச்சாரத்தை கையில் எடுத்தது பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள். ஆகையால், நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என வெளிப்படையாகக் கூறியதுடன் வேல் பிரச்சாரத்தையும் கையில் எடுத்தது திமுக. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் இந்துக்களின் ஓட்டுகள் வேண்டாம் எனக் கூறியதாக பரவும் புதியதலைமுறை நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது.
அடுத்ததாக, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், " பாஜகவினரின் மீதான பாலியல் வழக்குகள் எங்கள் வெற்றியை பாதிக்காது " எனக் கூறியதாக எடிட் செய்யப்பட்ட தந்திடிவி நியூஸ் கார்டை தெரிந்தே பரப்பி இருக்கிறார்கள். தந்தி டிவி செய்தியும் இதனை போலியானது என பதிவிட்டு உள்ளது.
சமீபத்தில் தன்னுடைய மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், தாஜ்மஹாலை விபச்சார விடுதியாக மாற்ற நினைத்தது காங்கிரஸ். ஆனால் அதை தடுத்தது பாஜக தான் " என கூறியதாக விஷம வதந்தியை புதியதலைமுறை செய்தியின் நியூஸ் கார்டில் எடிட் செய்து பரப்பி இருக்கிறார்கள்
மேலும் படிக்க : தேவர் சமூகம் பற்றி கே.பி. முனுசாமி, பழனிச்சாமி கூறியதாக பரவும் போலி செய்திகள் !
இதுமட்டுமின்றி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாக சமூகம் சார்ந்த தவறான செய்தியை எடிட் செய்து போலியான நியூஸ் கார்டுகளை பரப்பி இருக்கிறார்கள். இதேபோல், அதிமுக அரசிற்கு ஆதரவாக பழைய கருத்துக் கணிப்பையும் வைரல் செய்து உள்ளனர்.
மேலும் படிக்க : நல்லாட்சி வழங்கிய அரசு அதிமுக என பரப்பப்படும் பழைய கருத்துக் கணிப்பு !