YouTurn

தங்கம் விலை ரூ.5 ஆயிரம் குறைந்ததாக திரித்து செய்தி வெளியிட்ட பாலிமர் ஊடகம்!

தங்கம் விலை ரூ.5 ஆயிரம் குறைந்ததாக திரித்து செய்தி வெளியிட்ட பாலிமர் ஊடகம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

“ரூ. 5 ஆயிரம் குறைந்தது.. தங்கம் விலையில் தலைகீழ் திருப்பம்” என்று பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ளது திரிக்கப்பட்ட செய்தியே. தற்போது வெள்ளி விலையே ஒரு கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி அக்டோபர் 28 அன்று ஒரு கிலோ ரூ.1,65,000க்கு விற்பனையாகிறது.

பரவிய செய்தி

ரூ. 5 ஆயிரம் குறைந்தது.. தங்கம் விலையில் தலைகீழ் திருப்பம் - பாலிமர் ஊடகம்

Youtube link 

விரிவான விளக்கம்

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது.

இந்நிலையில் “ரூ. 5 ஆயிரம் குறைந்தது.. தங்கம் விலையில் தலைகீழ் திருப்பம்” என்று பாலிமர் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியானது. 


உண்மை என்ன? 

தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 28ஆம் தேதி, தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.3000 குறைந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர் இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று ( அக்.29) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210க்கும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,680க்கும் விற்பனை செய்யப்படுவதாக செய்திகளில் காணமுடிந்தது.

image.png


அதே போல் வெள்ளி விலை குறித்து தேடிப் பார்த்தோம். ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.165 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.5,000 சரிந்து ரூ. 1,65,000 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுவதை அறிய முடிந்தது. 


இதையடுத்து பரவி வரும் இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து அறிய, பாலிமர் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட அந்த செய்தியை பார்த்தோம். அதில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து ரூ. 90,400க்கு விற்பனை என்றும், சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5000 குறைந்து ரூ.1,65,000க்கு விற்பனையாகிறது எனவும் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் யூட்யூப் thumbnail மற்றும் தலைப்பில் “ரூ. 5 ஆயிரம் குறைந்தது.. தங்கம் விலையில் தலைகீழ் திருப்பம்” என்று திரித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.


முடிவு: 

வெள்ளி விலையே ஒரு கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி அக்டோபர் 28 அன்று ஒரு கிலோ ரூ.1,65,000க்கு விற்பனையாகிறது. எனவே “ரூ. 5 ஆயிரம் குறைந்தது.. தங்கம் விலையில் தலைகீழ் திருப்பம்” என்று பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ளது திரிக்கப்பட்ட செய்தியே. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க