
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நாடு முழுவதிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் பொழுது, போராட்ட களம் வன்முறை களமாக மாறியும் வருகின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை அடித்து ஒடுக்குவதும், சில பகுதிகளில் காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை கொண்டு கடுமையாக தாக்குவதும், பொது...
பரவிய செய்தி
நம்நாட்டில் அகதி என்ற போர்வையில் குடியேறிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்.
எங்கள் காவல்துறையினரின் கையில் ஆயுதம் இருந்தும் நிதானமாக கையாளும் தன்மை உடையவர்கள்.
அதே நேரத்தில் இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் தெரியும். அது போன்ற சூழ்நிலைக்கு தள்ளாமல் அமைதியாக வெளியேற வேண்டும். pic.twitter.com/plqvzzA7nh
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) December 20, 2019
Twitter link | archived link
விரிவான விளக்கம்
இந்நிலையில்தான், போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட காவலர்கள் இரத்தத்துடன் இருக்கும் புகைப்படங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் தலைவர் சிடிஆர்.நிர்மல் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் காவலர்கள் தாக்கப்படும் மற்றும் ரத்தத்துடன் இருக்கும் மூன்று புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்
This is not a scene from a Bollywood movie. This is what "Peaceful Protestors" are doing to Our Police.
NEVER FORGET NEVER FORGIVE ! ! !#IStandWithPolice#IndiaSupportsCAB pic.twitter.com/9noRKXRN1m
— C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) December 20, 2019
Twitter link | archived link
இப்புகைப்படங்களை கர்நாடகவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் சிடி.ரவி என்பவர் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். மேற்காணும் புகைப்படங்களில் ஒவ்வொன்றாக அனுப்பட்டு, அதன் உண்மைத்தன்மையை அறிந்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. ஆகையால், இம்மூன்று புகைப்படங்கள் எங்கு , எப்பொழுது எடுக்கப்பட்டன என்பதை ஆராய தீர்மானித்தோம்.
மேலும் படிக்க : குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் திரண்ட கூட்டமா ?
உண்மை என்ன ?
முதலில் மூன்று காவலர்கள் அடிபட்ட நிலையில் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், hemant pandey என்பவர் 2018 ஏப்ரல் 4-ம் தேதி ட்விட்டரில் பக்கத்தில் இதே புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இந்த பதிவை டெல்லியைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் விஜய் பன்வார் என்பவர் பகிர்ந்தும் உள்ளார்.
The colour of protest
The burden of peace..
The unsung heros
The villified beasts...
The show of strength..
The spectacle of duty..
This is the khaki..
Soaked in sweat
Drenched in red..@IPS_Association @SidhuIps2012 pic.twitter.com/BCaXyXG8O3
— hemant pandey (@hemantp83) April 4, 2018
Twitter link | archived link
காவலர்கள் நடந்து வரும் பொழுது உயர் அதிகாரி உடையில் இரத்தம் சிந்தி இருக்கும் இரண்டாவது புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், டிசம்பர் 19-ம் தேதி " Gujarat CAA protesters corner policemen, rain stones as locals rescue struggling cops " என்ற தலைப்பில் இந்தியா டுடேவில் வெளியான செய்தியில் அப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

அந்த புகைப்படத்திற்கு கீழே வன்முறை சம்பவத்தில் குஜராத் காவலர்கள் அடிபட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத்தின் ஷா-இ-ஆலம் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கியவர்கள் காவலர்களின் மீது கண்மூடித்தனமாக கற்களை கொண்டு எறிந்து தாக்குதலில் ஈடுட்டனர். அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையைச் சேர்ந்தவர் சாலையில் தாக்கப்பட்ட நிலையில் இருக்க அவரின் மீது ஒருவர் கற்களை வீசும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமும் , குஜராத்தின் ஷா-இ-ஆலம் பகுதியில் காவலர்கள் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலின் பொழுது எடுக்கப்படவையே. டிசம்பர் 19-ம் தேதி " CAA stir: Bandh turns violent in Ahmedabad, 30 injured " என்ற தலைப்பில் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான செய்தியில் காவலர் தாக்கப்படும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
முதலில் இருக்கும் புகைப்படத்தில் மூன்று காவலர்கள் தலையில் அடிபட்டு இருக்கும் புகைப்படத்திற்கும், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அது 2018 ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது. மீதமுள்ள இரு புகைப்படமும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குஜராத் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்கள் மீது கற்களை கொண்டு தாக்குதலில் காயப்படைந்தவர்கள் என்ற தகவல் நமது தேடலில் கிடைத்துள்ளது.
போராட்டங்கள் வன்முறையாக மாறும் பொழுது பொது சொத்துக்களை சேதமடையச் செய்வதும், காவலர்கள் மீது கண்மூடித்தமான தாக்குதல்களை நிகழ்த்துவதும் கண்டிக்கத்தக்கவை.