யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
காவலர்கள் நடனமாடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும் பரவி வரும் வீடியோவில் காவலர்கள் பலர் சூழ்ந்திருக்க, நடுவே இரு காவலர்கள் தமிழ்திரைப்பட பாடல் ஒன்றிற்கு நடனமாடுவதையும் பார்க்க முடிகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
காவலர்கள் நடனமாடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும் பரவி வரும் வீடியோவில் காவலர்கள் பலர் சூழ்ந்திருக்க, நடுவே இரு காவலர்கள் தமிழ்திரைப்பட பாடல் ஒன்றிற்கு நடனமாடுவதையும் பார்க்க முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
பல சமூக ஊடகப் பக்கங்களிலும் இதே வீடியோ மலையாளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் அதில் காவலர்களும் மாலையாள பாடல் ஒன்றிற்கு நடமாடுவதையே காண முடிந்தது.
எனவே இது குறித்து மேலும் தேடினோம். “Kerala Vision News 24x7” இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ பதிவு செய்யப்பட்டு, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பூச்சக்கல் காவல்நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் வீடியோவில் இருப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவலர்கள் அல்ல என்பதையும், இந்த வீடியோவை தமிழ் திரைப்படப்பாடலுடன் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டு காவலர்களின் நடனம் எனப் பரவும் வீடியோ, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பூச்சக்கல் காவல்நிலையில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.