YouTurn

வாக்களிக்க சொந்த ஊர் செல்ல பேருந்து கேட்ட மக்களை போலீஸார் தாக்கியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

வாக்களிக்க சொந்த ஊர் செல்ல பேருந்து கேட்ட மக்களை போலீஸார் தாக்கியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ கடந்த மார்ச் 09ஆம் தேதி, தெலுங்கானா மாநிலத்தில் உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி போது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

போராட்டம் செய்தவர்களை காவலர்கள் அடித்து விரட்டுகின்றனர்

இங்கு மக்களுக்கான அடிப்படை வசதி கூட செஞ்சு தரமாட்றாங்க.

சரி, உரிமையை கேட்டாலும் அடித்து விரட்டுகின்றனர் இது தான் ஜனநாயக நாடா?

வெறுத்து போச்சு

கொத்தடிமைளையும் திமுக குடும்பத்தையும் பார்த்தா அருவருப்பா இருக்கு 



X Link


விரிவான விளக்கம்

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் வேலையும் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும், கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலும்  ஏப்ரல் 22ஆம் தேதி இரவு குவிய ஆரம்பித்தனர். ஆனால் அவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாமல் பல மணிநேரமாக காத்திருந்தனர். மேலும், எல்லா பேருந்துகளிலும் கூட்ட நெரிசலாக இருந்தது. இதனால் பயணிகள் பலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையின் ஓரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக நிற்கும் நிலையில் அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டும் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ’தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக சொந்த ஊர்க்கு செல்ல பேருந்து வசதி கேட்ட மக்கள் மீது தமிழ்நாடு போலீஸ் தடியடி நடத்தியதாக’ தவெக ஆதரவாளர்கள் பரப்புகிறார்கள். 



உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘anush_2730’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. ஆனால் இந்த வீடியோ கடந்த மார்ச் 09ஆம் தேதியே பதிவிடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. 



இது குறித்து மேலும் தேடியபோது, ‘Article 24 News’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில், கடந்த மார்ச் 08ஆம் தேதி இந்தியா 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றதையொட்டி அதனை கொண்டாட தெலுங்கானா தலைநகர் ஹைதரபாத்தில் உள்ள தலைமைச் செயலகம் முன்னால் ரசிகர்கள்  கூட்டமாக கூடினர். அவர்களை தடுக்க போலீஸார் தடியடி நடத்தியதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதிலிருந்து இந்த வீடியோ கடந்த மார்ச் 09ஆம் தேதி, தெலுங்கானா மாநிலத்தில் உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.


முடிவு:


தெலுங்கானாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, வாக்களிக்க சொந்த ஊர் செல்ல பேருந்து வசதி செய்து தரச் சொல்லி கேட்ட மக்கள் மீது தமிழ்நாடு போலீஸார் தாக்குதல் நடத்தியதாக தவறாக பரப்புகிறார்கள்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க