யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
கிறிஸ்தவ மதத்தில் இருந்து விலகி, 5 லட்சம் கிறிஸ்தவர்கள் ஹிந்து மதத்தில் இணைந்துள்ளனர் (போலந்து).

விரிவான விளக்கம்
போலந்து நாட்டில் கிறிஸ்தவ மதத்தில் இருந்து விலகிய 5 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தில் இணைந்த பிறகு கிருஷ்ண மஹா மந்திரத்தை பாடியதாக 2 நிமிட வீடியோ ஒன்று பாஜகவினரால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ இசை கலைஞர்களால் நடத்தப்படும் கான்சர்ட் நிகழ்ச்சியை போன்று உள்ளது. அதில், " przystanek woodstock " மேடையில் எழுதப்பட்டு இருப்பதை பார்க்க முடிந்தது. இதை வைத்து தேடுகையில், Krishna Tube எனும் யூடியூப் பக்கத்தில் இதன் முழுமையான வீடியோ பதிவாகி இருப்பதை பார்க்க முடிந்தது.
வீடியோவின் நிலைத்தகவலில், 1997ல் போலந்து வூட்ஸ்டாக் திருவிழாவில் ஹரே கிருஷ்ணா கான்சர்ட் நிகழ்ச்சியை போலந்து நாட்டு தொலைக்காட்சி ஊடகங்கள் பதிவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
1980 காலக்கட்டங்களிலேயே போலந்து நாட்டில் இஸ்கான் அமைப்பு ஆசிரமம், கோவில்களை அமைக்கும் பணிகளை தொடங்கி விட்டனர். இது 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போலந்தில் உள்ள ஜாரி நகருக்கு அருகே போலந்து வூட்ஸ்டாக் திருவிழாவில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் மற்றும் அவர்களின் "வில்லேஜ் ஆஃப் பீஸ் "இசைக்குழுவினரின் நிகழ்ச்சியின் ஆவணப்படம் என மற்றொரு வீடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது எதிலும், கிறிஸ்தவர்கள் மதம் மாறியதாக எங்கும் குறிப்பிடவில்லை.
Pewresearch சென்டர் இணையத்தில் உள்ள 2020 மக்கள் தொகை தரவின்படி, போலந்து நாட்டில் இந்துக்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் என்றுள்ளது. அங்கு 3.5 கோடிக்கும் அதிகமாக கிறிஸ்தவர்களே உள்ளனர். மேலும், போலந்து நாட்டில் 20 ஆயிரம் இந்தியர்கள்(NRI & OCI) இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

மேலும், போலந்து நாட்டில் 5 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறியதாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை. இதற்கு முன்பாக, அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறியதாக தவறான தகவல் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது .
படிக்க: அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறியதாகப் பரவும் லண்டன் ரதயாத்திரை வீடியோ
முடிவு :
நம் தேடலில், போலந்து நாட்டில் 5 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறியதாகப் பரவும் தகவல் தவறானது. வைரல் செய்யப்படும் வீடியோ 1997ல் போலந்து வூட்ஸ்டாக் திருவிழாவில் நடந்த ஹரே கிருஷ்ணா கான்சர்ட் வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.