YouTurn

மக்களே இல்லாத காலி மைதானத்தில் பிரதமர் மோடி கையசைத்து கொண்டிருந்தாரா ?

மக்களே இல்லாத காலி மைதானத்தில் பிரதமர் மோடி கையசைத்து கொண்டிருந்தாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

ஹெலிகாப்டர் தரையிறங்கி இருக்கும் மைதானத்தில் நிற்கும் பிரதமர் மோடி பாதுகாவலர்களைத் தவிர மக்களே இல்லாத மைதானத்தில் கையசைத்துக் கொண்டே சுற்றி வருவதாக 28 நொடிகள் கொண்ட வீடியோ பின்னணி இசையுடன் ட்ரோல் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவை குறித்து தேடுகையில், " 2022 பிப்ரவரி 20-ம் தேதி உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க ஹெலிகாப்டர் தரையிறங்கும் பகுதியில் மாடிகள் மற்றும் கட்டிடங்களில் மக்கள் குவிந்தனர் " என ஏஎன்ஐ செய்தி முகமை வைரலாகும் 28 நொடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.



Twitter link | Archive link 



NDTV செய்தியும் அதே வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. மேற்காணும் வீடியோவில், பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்கிய பகுதியைச் சுற்றி மக்கள் கரகோசம் எழுப்புவதை கேட்கவும், தடுப்புகள் மற்றும் மாடிகளில் மக்கள் இருப்பதை பார்க்கவும் முடிகிறது.



முடிவு : 

நம் தேடலில், பிரதமர் மோடி மக்களே இல்லாத காலியான மைதானத்தில் கையசைத்து கொண்டிருப்பதாக வைரல் செய்யப்படும் வீடியோ தவறானது. உண்மையான வீடியோவில்  மக்கள் இருப்பதை பார்க்கவும், அவர்களின் கரகோசத்தை கேட்கவும் முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க