YouTurn

பிரதமர் மோடியை காணவில்லை என ஹிந்துஸ்தான் டைம்ஸில் விளம்பரம் வெளியானதா ?

பிரதமர் மோடியை காணவில்லை என ஹிந்துஸ்தான் டைம்ஸில் விளம்பரம் வெளியானதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பிரதமரை காணவில்லை!! ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் விளம்பரம் !



Facebook link | Archive link

விரிவான விளக்கம்

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளின் முகப்பு பக்கத்தில், காணவில்லை. இந்தியாவின் பிரதமர், கங்கையின் மகன் என்றும் அழைக்கப்படுவார். பிரதான் சேவக் என்றும் அழைக்கப்படுகிறார். விளக்கம் - மார்பு 56 அங்குலம், நீண்ட வெள்ளை தாடி. பெரிய தொழிலதிபர்களின் நிறுவனத்தில் காணப்படுவதாக அறியப்படுகிறது. மயிலை நேசிப்பவர் " என பிரதமரின் புகைப்படத்துடன் இடம்பெற்று இருக்கிறது.



உண்மை என்ன ?

இதுகுறித்து தேடுகையில், மே 7ம் தேதி வெளியான ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின் பக்கங்கள் epaper.hindustantimes.com தளத்தில் வெளியாகி இருக்கிறது. உண்மையான செய்தித்தாள் பக்கத்தில் " பிரதமர் மோடியை காணவில்லை " என வெளியான இடத்தில் " COURT A PUBLIC SPACE, COVERAGE PART OF FREEDOM OF SPEECH, SAYS SC " என்ற தலைப்பில் வெளியான செய்தியே இடம்பெற்று உள்ளது. 

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி பிரதமரை காணவில்லை என எந்த விளம்பரமும் செய்யவில்லை. உண்மையான ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணைய செய்தித்தாளை எடுத்து எடிட் செய்து தவறாக பரப்பி இருக்கிறார்கள்.


மே 13-ம் தேதி Outlook india செய்தி நிறுவனம், " இந்திய அரசை காணவில்லை " எனும் கவர் படத்தை வெளியிட்டது. அந்த புகைப்படம் இந்திய அளவில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.



Archive link 

அதைத் தொடர்ந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் பிரதமர் மோடியை காணவில்லை என வெளியாகியதாக எடிட் செய்த படத்தை பரப்பி இருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், பிரதமர் மோடியை காணவில்லை என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளில் விளம்பரம் வெளியானதாக பரவும் செய்தித்தாள் படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க