யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்திரவு ! மாஸ்க்கை சரியாகப்போடாமல் அமெரிக்க பிரமுகர்களைச் சந்தித்த விவகாரம். பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்திரவு. 

விரிவான விளக்கம்
அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல், மாஸ்க்கை சரியாக அணியவில்லை என்பதால் அவருக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வேண்டும் என வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதாக NDTV செய்தி புகைப்படம் மற்றும் பிரதமர் மோடி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Twitter link | Archive link

உண்மை என்ன ?
"குவாட் " அமைப்பின் மாநாடு மற்றும் ஐநா பொதுசபைக் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
ஆனால், பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வேண்டும் என வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக அமெரிக்க மற்றும் இந்திய செய்திகள் எதிலும் வெளியாகவில்லை.
NDTV உடைய தமிழ் இணையதளத்தில் மட்டும் அப்படியொரு செய்தி வெளியாகியதாக ஸ்க்ரீன்ஷார்ட் வைரல் செய்யப்பட்டு வருகிறது. அந்த தலைப்பை வைத்து தேடிய போது செய்தி குறித்த தகவல் இல்லை.

ஆகையால், NDTV தமிழ் இணையதளத்தில் தேடிப் பார்க்கையில் அந்த இணையதளத்தில் சமீபத்தில் எந்த செய்திகளுமே வெளியாகவில்லை. 2020 செப்டம்பருக்கு பிறகு எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பதை NDTV தமிழ் இணையதளம் மற்றும் ட்விட்டர் மூலம் அறிய முடிந்தது.

வைரல் செய்யப்படும் NDTV தமிழ் செய்தியின் ஸ்க்ரீன்ஷார்ட்டில், ANI எனும் செய்தி நிறுவனத்தின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. இந்த செய்தியை எழுதியதாக காண்பிக்கப்பட்டு இருக்கும் பரத் ராஜ் கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்துடன் NDTV செய்தியில் இருந்து விலகியதாக அவருடைய linkedin பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல், ட்ரெண்டிங் பிரிவில் இடம்பெற்று இருக்கும் " டாடா குழும " செய்தி கடந்த ஆண்டு வெளியான செய்தியாகும். மேலும், உத்தரவு என்பதற்கு பதிலாக உத்திரவு என இடம்பெற்று இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி அணிந்து இருக்கும் மாஸ்க் அவருடைய மூக்கிற்கு கீழே இருக்கும் புகைப்படம் ANI செய்தி முகாமை வெளியிட்டு இருக்கிறது. அந்நிறுவனத்தின் பெயருடன் இருக்கும் புகைப்படத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவு என பரவும் செய்தி வதந்தியே என அறிய முடிகிறது.