YouTurn

கேலோ இந்தியா துவக்க விழாவில் பிரதமருக்கு கிருஷ்ணன் சிலை வழங்கிய ஸ்டாலின் எனப் பரவும் தவறான தகவல்!

கேலோ இந்தியா துவக்க விழாவில் பிரதமருக்கு கிருஷ்ணன் சிலை வழங்கிய ஸ்டாலின் எனப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திமுகவின் பகுத்தறிவு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பணிந்தது...




Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

13-வது கேலோ இந்தியா போட்டிகள் ஜனவரி 19-ல் தொடங்கி வருகின்ற 31-ம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கான தொடக்கவிழா நேற்று (ஜனவரி 19) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்த்து, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கேலோ இந்தியா போட்டிக்கான துவக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக கிருஷ்ணன் சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் சின்னமாக (mascot) வீரமங்கை வேலு நாச்சியார் உருவம் அறிவிக்கப்பட்டுள்ளதை Sports Tamilnadu யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ மூலம் உறுதி செய்ய முடிந்தது.



இது குறித்து மேலும் தேடியதில், கேலோ இந்தியா துவக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவு பரிசு வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம், officialkheloindia மற்றும் sportstn_ இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்ததை அறிய முடிந்தது. அதில், பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வேலுநாச்சியாரின் சிலையையே நினைவுப் பரிசாக வழங்குகிறார்.

 




கார்டூன் வடிவில் உள்ள வேலுநாச்சியாரின் சிலையை, சிலர் தவறாக கிருஷ்ணரின் சிலை என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: காஷ்மீரின் லால் சவுக்கில் ராமர் படம் காட்சிப்படுத்தப்பட்டதாகப் பரவும் தவறான தகவல்!

மேலும் படிக்க: ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்ற பட்டாசு டிரக் தீ பிடித்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

முடிவு:

நம் தேடலில், கேலோ இந்தியா துவக்கவிழாவில் பிரதமருக்கு கிருஷ்ணன் சிலை வழங்கிய ஸ்டாலின் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. அது கிருஷ்ணன் சிலை அல்ல, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் சின்னமாக (mascot) அறிவிக்கப்பட்ட வேலு நாச்சியார் சிலையே பிரதமருக்கு வழங்கப்பட்டது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க