YouTurn

பிரதமர் மோடியை மனிதனாக இருங்கள் எனக் கூறும் ஃபோட்டோஷாப் பதாகையுடன் பரவும் புகைப்படம் !

பிரதமர் மோடியை மனிதனாக இருங்கள் எனக் கூறும் ஃபோட்டோஷாப் பதாகையுடன் பரவும் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

" திரு. நரேந்திர மோடி, இந்தியர்களுக்கு ஹிந்து-முஸ்லிம் நாடகம் தேவையில்லை, எங்களுக்கு தடுப்பூசி, படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் தேவை! மனிதனாக இருங்கள் " எனும் வாசகம் இடம்பெற்ற பதாகை உடன் பெண் ஒருவர் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜே சேர்ச் செய்கையில், மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை தாக்குதல் தொடர்பாக வாசகங்கள் எழுதப்பட்ட பதாகையுடன் இப்புகைப்படம் சஹானா சிங் எனும் ட்விட்டர் பக்கத்தில் மே 9ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.



Twitter link | archive link 

இந்த புகைப்படத்தில் ஃபோட்டோஷாப் செய்து யாரோ சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். அது தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் எனத் தெரிந்தும், அதில் உள்ள வார்த்தை சரியானது எனக் கமெண்ட் செய்து தெரிந்தே பலரும் பகிர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது. இதுபோன்ற ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர வேண்டாம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க